எப்பா அண்ணாமலைக்கு என்னா தில்லு.. தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்து அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 30, 2021, 1:14 PM IST
Highlights

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, கொரோனா தொற்றுக்கு இடையில் பள்ளிகளை திறப்பதில் அரசு கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். 

வேளான் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றிய முதல்வர் ஸ்டாலின் பேச்சில் திராணி இல்லை என்றும், 3 வேளாண் சட்ட திருத்தங்களை எதிர்த்து மாவட்டம்தோறும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக தெரிவித்துள்ளார். மறைந்த  முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே மூப்பனார் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, கொரோனா தொற்றுக்கு இடையில், 

பள்ளிகளை திறப்பதில் அரசு கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்ற அவர், அரசுப் பள்ளியை பொறுத்தவரையில் அரசு கூடுதல் கவனம் செலுத்தும் என்று நம்புவதாக அவர் கூறினார். அரசியலில் நேர்மை என்பதே இல்லை என்று தெரிவித்த அவர், ஆனால் நேர்மையான அரசியலை முன்னெடுக்க மூப்பனார் நினைவிடத்தில் உறுதி ஏற்போம் என்றார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் பாஜக விவசாய பிரிவு ஈடுபடும் என தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டதற்காகவே, தற்போது வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய அவர், இது வெறும் கண்துடைப்பு நாடகம் என்றார். வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி பேசிய முதல்வர் ஸ்டாலினின் பேச்சில் திராணி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.  3 வேளாண் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அண்ணாமலை அறிவித்தார். 

 

click me!