தமிழகத்தில் பல்வேறு தடங்கல்கள்.. கவலைப்படாதீங்க,நாங்க இருக்கோம்.! இப்படிக்கு உங்கள் அன்புத்தம்பி அண்ணாமலை !

Published : Apr 10, 2022, 11:50 AM IST
தமிழகத்தில் பல்வேறு தடங்கல்கள்.. கவலைப்படாதீங்க,நாங்க இருக்கோம்.! இப்படிக்கு உங்கள் அன்புத்தம்பி அண்ணாமலை !

சுருக்கம்

 தமிழகத்தில் பல்வேறு தடங்கல்களால் இன்னும் பல்வேறு திட்டங்கள் உங்களை சென்றடையவில்லை.  உங்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க பாரதப்பிரதமர் கடும் முயற்சி எடுத்து வருகிறார், உங்கள் குடும்பத்தில் ஒருவராக, உங்கள் தார்பராக, உங்கள் துயர்துடைக்க, வாழ்வாதாரம் மேம்படுத்த பெரு முயற்சி எடுத்து வருகிறார்.

பாஜக தலைவர் அண்ணாமலை :

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதில், ‘என் அன்பிற்குறிய தமிழக விவசாயப் பெருமக்களே வணக்கம். கொரோளா பெருத்தொற்று காலத்திலும், ஓய்வின்றி உலகிற்கே உணவளித்த உங்களுக்கு அன்புத் தம்பி அண்ணாமலையின் முதல் கடிதம், உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் வந்து சந்தித்து ஒருநாள் உங்களோடு உழவுப் பணியாற்ற வேண்டும் என்பது என் ஆசை. 

அதற்கு முன்னதாக இக்கடிதத்தின் வாயிலாக உங்களுக்கு சிலவற்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேள். நாற்று நடுபவர்கள் மேம்பட்டால் நாடும் மேம்படும் என நம்பும் அரசு பிரதமர் மோடி அவர்கள் தலைபையிலான மத்திய அரசு. சரித்திர சாதனையாக இதுவரை எந்த அரசும் செய்யாத வகையில் விவசாயத்திற்கென்று கடந்த ஆண்டு 1.34 இலட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி, விவசாயத்துறைக்கு தனிக்கவனம் செலுத்திய நமது பத்திய அரசு 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் துரிதமாக செயல்பட்டு வருகிறது. 

பிரதமர் மோடி :

தற்போது இந்தியா முழுவதும் பி.எம் (PM) - கிசான் (Kisan) திட்டத்தின்கீழ் 10.34 கோடி விவசாயிகளுக்கும் தமிழகத்தில் 38 இலட்சம் விவசாயிகளுக்கும் ரூ.6000/- வழங்கியுள்ளார் குறைந்த பட்ச ஆதார விலையில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் அதிகபட்ச விலையாக 22 பயிற்களுக்கும் முதன்முறையாக உற்பத்தி செலவிற்கு அதிகமாக சுமார் 50% அதிகரிக்கப்பட்டது.

மண் வள அட்டை திட்டம், பயிர்க்காப்பீடு, கிகான் கடன் அட்டை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், சொட்டுநீர் பாசனம், இலவச உழவு இயந்திரங்கள், போன்று திட்டங்கள் மூலமாக நமது பாரதப் பிரதமர் இந்தியா முழுவதிலுமுள்ள விவசாயிகளின் மனதில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளார். விவசாயிகளின் நலன் காக்ககூடிய ஒரே பிரதமர் நரேந்திரமோடி என்பதை தொடர்ந்து நிருபித்து காட்டுகிறார் காணொளி மூலம் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார். 

விவசாயிகளுக்கு அண்ணாமலை கடிதம் :

உங்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க பாரதப்பிரதமர் கடும் முயற்சி எடுத்து வருகிறார், உங்கள் குடும்பத்தில் ஒருவராக, உங்கள் தார்பராக, உங்கள் துயர்துடைக்க, வாழ்வாதாரம் மேம்படுத்த பெரு முயற்சி எடுத்து வருகிறார். தமிழகத்தில் பல்வேறு தடங்கல்களால் இன்னும் பல்வேறு திட்டங்கள் உங்களை சென்றடையவில்லை. 

எனவே இக்கடிதத்துடன் உங்களை வந்தடையும் விவசாய அணி நிர்வாகிகள் உங்களை மத்திய அரசு திட்டத்தின் மூலம் பயன்பெறச் செய்ய காத்திருக்கிறார்கள். உங்கள் நிறைகளையும், குறைகயையும் இவர்களோடு பகிர்ந்தால் உடனடியாக அடுத்தகட்ட முயற்சி 'மேற்கொள்வேனி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.உங்களை விரைவில் சந்திக்க காத்திருக்கும் உங்கள் அன்புத் தம்பி’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சைக்கிள் வேணுமா உனக்கு..? சைக்கிள் கேட்ட 9 வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!