தமிழக ஆளுநரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக ஆளுநரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் ஒருவர் திமுக கவுன்சிலரால் அடித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிப்வித்துள்ளனர். மேலும் ராணுவ வீரர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் திமுகவிற்கு எதிராகவும் பாஜக சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தியது.
இதையும் படிங்க: தமிழக காவல்துறை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை… அண்ணாமலை குற்றச்சாட்டு!!
இதனிடையே ராணுவ வீரர் படுகொலை தொடர்பாக புகார் அளிக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்.
இதையும் படிங்க: ஆடு, மாடுகளை போல் மக்களை அடைத்து.. திமுகவினரை கைது செய்ய வேண்டும் - சீமான் ஆவேசம்
அப்போது, கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு, திமுகவை சேர்ந்த பிரமுகரால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக புகாளித்துள்ளார். மேலும் தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை பாஜகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்ட நிலையில் தற்போது அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.