ஆடு, மாடுகளை போல் மக்களை அடைத்து.. திமுகவினரை கைது செய்ய வேண்டும் - சீமான் ஆவேசம்

By Raghupati R  |  First Published Feb 21, 2023, 8:24 PM IST

ஊடகவியலாளர்களைத் தாக்கிய திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் பணம்கொடுத்து மக்களை அழைத்துச் சென்று, ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை மண்டபங்களில் அடைத்து வைத்திருக்கும் கொடுமைகளை நேரடி கள ஆய்வு மூலம் ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரைத் தாக்கியுள்ள திமுகவினரின் கொலைவெறிச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..அதெல்லாம் பழசு, இது ஈரோடு பார்முலா..! கமல் ஹாசன் கால்ஷீட் எவ்வளவு.? பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு

ஆடு, மாடுகளைப்போல மக்களை அடைத்து வைத்து, அவர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளைப் பறித்து, மக்களாட்சி முறைமையையே குழிதோண்டிப் புதைக்கும் ஆளும் திமுகவினரின் அதிகார அத்துமீறல்களை வேடிக்கை மட்டுமே பார்க்கும் தேர்தல் ஆணையத்தின் அலட்சியப்போக்குதான், தற்போது உண்மைகளை வெளிக்கொணரும் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் தொடுக்கும் அளவிற்கு நிலைமையை மிக மோசமாக்கியுள்ளது.

இதையும் படிங்க..இது கபட நாடகம்.! “கோழைத்தனம்” திமுகவின் தரம் தாழ்ந்த பேச்சாளராக மாறிய கமல்.. கடுப்பான அதிமுக

திமுக குண்டர்கள் ஊடகவியலாளர்களையே மிரட்டித் தாக்குகிறார்கள் என்றால், அப்பாவிப் பொதுமக்களை என்ன பாடுபடுத்துவார்கள்? என்பதைத் தேர்தல் ஆணையம் இனியாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆளும் திமுகவினரின் இத்தகைய சனநாயக விரோதச் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும்,  தொலைக்காட்சி ஊடகவியாளர்களைத் தாக்கிய திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து, விரைந்து கைது செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..ச்சீ.. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை.. உடந்தையாக இருந்த அண்ணன் - கண்ணீருடன் புகார் கொடுத்த மகள்

click me!