அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் இயங்கி வருகிறது.
அன்பு ஜோதி ஆசிரமத்தின் மீது கற்பழிப்பு புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட 143 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், ஆசிரமம் குறித்த பல புகாரின் அடிப்படையில் பாலியல் மற்றும் மனநலம் பாதிக்கபட்டவர்களை துன்புறுத்தல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நிர்வாகி ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா ஜு பின், மேலாளர் பிஜிமோன் உள்பட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பல்வேறு புகார்களை தெரிவித்து உள்ளார். அதில், ’தமிழகத்தில் பல வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் திமுக கவுன்சிலர் சம்பந்தப்பட்டுள்ளார். விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்தவர்கள் உடலுறுப்புகளுக்காக கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. பலபேர் காணாமல் போயுள்ளனர். ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களின் மரணம் தொடர்பாக முறையான ஆவணங்கள் இல்லை.
கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு என 3 மாநிலங்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளதால், அன்புஜோதி ஆசிரம வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது என்று புகாரை அடுக்கியுள்ளார் அண்ணாமலை.
இதையும் படிங்க..வாக்காளர்களுக்கு திமுகவினர் பத்துப்பாத்திரம் மட்டும்தான் தேய்க்கவில்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலாய் !