இந்த இரண்டு சமுதாயம் வளர்ந்தாலே தமிழகம் வளர்ச்சியடையும்.. அன்புமணி ராமதாஸ்..!

By vinoth kumar  |  First Published Feb 18, 2023, 2:51 PM IST

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக முதல்வரை சந்தித்தோம். வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு எந்த சமுதாயத்திற்கும் எதிரானது கிடையாது. எங்களின் கொள்கை 100% வேலைவாய்ப்பில் எந்த சமுதாயத்தினர் எவ்வளவு இருக்கிறார்களோ அவ்வளவு விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். 


தமிழ்நாட்டில் போதை பொருட்கள் தடுக்க சிறப்பு கவனம் எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தோம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திந்த பின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக முதல்வரை சந்தித்தோம். வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு எந்த சமுதாயத்திற்கும் எதிரானது கிடையாது. எங்களின் கொள்கை 100% வேலைவாய்ப்பில் எந்த சமுதாயத்தினர் எவ்வளவு இருக்கிறார்களோ அவ்வளவு விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். 

Latest Videos

தமிழகத்தில் தலித், வன்னியம் சமுதாயங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. இந்த சமுதாயம் வளர்ந்தால் தமிழகம் வளர்ச்சியடையும். பீகாரை போல் சாதிவாரி கண்க்கெடுப்பு நடத்த வேண்டும். சமூகநீதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். சாதி வாரியான கணக்கெடுப்பு என்பது நீண்ட கால செயல்பாடு, இருந்தாலும் இந்த 2 மாதத்திற்குள்ளாக நீதிமன்றம் தெரிவித்த தரவுகளை சேகரித்து மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படாத அளவிற்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசை வலியுறுத்தி உள்ளோம். 

மேலும், தருமபுரி காவிரி உபரிநீர் ததிட்டம் அரியலூர் பாசன திட்டம் ஆகியவற்றை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். தமிழ்நாட்டில் போதை பொருட்கள் தடுக்க சிறப்பு கவனம் எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தோம். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்க எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம் என அன்புமணி கூறியுள்ளார். 

click me!