வாக்காளர்களுக்கு திமுகவினர் பத்துப்பாத்திரம் மட்டும்தான் தேய்க்கவில்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலாய் !

By Raghupati R  |  First Published Feb 18, 2023, 5:42 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு திமுகவினர் பத்துப்பாத்திரம் மட்டும்தான் தேய்க்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார்.


சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் 164-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி முதல்வர் மற்றும் பிற கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் சிலைக்கு அரசு தரப்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tap to resize

Latest Videos

பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது, சிங்கார வேலர்  பகுத்தறிவுவாதி, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர், சாதியற்ற சமூகம் உருவாக வேண்டுமென்று போராடியவர். சென்னை மாநகராட்சிப் பொறுப்பிலிருந்து அவர் சென்னைக்காக செய்த செயல் திட்டங்கள் போற்றுதலுக்குரியது.

எண்ணிலடங்காத புத்தகங்களை சமுதாய நேக்கோடு எழுதியவர். இந்தியாவிலேயே முதன்முதலாக மே தினத்தைக் கொண்டாடிய தோழர்  சிங்காரவேலர்தான். இப்படிப்பட்ட பெருமைக்கெல்லாம் உரியவர் என்பதால்தான் இராயபுரம் தொகுதியில் அ‌.தி.மு.க ஆட்சியின் போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால்  சிங்காரவேலருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது.

இதையும் படிங்க..Erode East Election : பரோட்டா போடுவதும், வடை சுடுவதும்தான் அமைச்சர்களின் வேலையா.? எடப்பாடி பழனிசாமி அதிரடி !

முதலமைச்சர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வைத்து பெட்டிகளில் புகாரை எழுதிபோடுங்கள் நானே நேரடியாக வந்து பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன் என்றார். விடியா ஆட்சியில் ஆட்சியரகத்தில் தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தேர்தல் பிராச்சரத்தின் போது அமைச்சர்கள் டீ போடுறாங்க, ஆம்லெட் போடுறாங்க. இது அசிங்கமா இல்லையா ? வாக்காளர்களுக்கு திமுகவினர் பத்துப்பாத்திரம் மட்டும்தான் தேய்க்கவில்லை என்று கிண்டல் அடித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வாக்காளர்களுக்கு சுதந்திரம் இல்லாமல் ஆடு,மாடுகளைப் போல பட்டியில் அடைக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்யும் கனிமொழிக்கு பழைய வரலாறு தெரியாது. அதிமுக ஆட்சியை கலைத்த இந்திரா காந்தியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்தவர் கருணாநிதி.

அதிமுக ஆட்சிக் காலத்தில் இலங்கை பயந்து இருந்ததது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு துப்பாக்கி சூடு சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு காங்கிரஸ் மீது திமுக பழியை போடும் என்று கூறினார்.

இதையும் படிங்க..தரக்குறைவான வார்த்தையை உச்சரித்த பிரபல நடிகர்.. அஜித் குமாரை கண்டிக்கும் தமிழக பாஜக - சர்ச்சையில் துணிவு!

click me!