யார் எப்படி போனால் என்ன..? செம குஷியில் தமிழக பாஜக... 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ரெடி..!

By vinoth kumarFirst Published Feb 21, 2019, 5:21 PM IST
Highlights

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான அரசியல் களம் சூடிபிடிக்கத்தொடங்கியது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன. இது தமிழகம்-புதுவைக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான அரசியல் களம் சூடிபிடிக்கத்தொடங்கியது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன. இது தமிழகம்-புதுவைக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரியை பொருத்த வரையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி பலமான ஓட்டு வங்கியை வைத்துள்ளது. அதேபோல் இவர்களுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் வலுவான வாக்கு வங்கியை வைத்துள்ளது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி. எதிர்வரும் மக்களவைத் தொகுதியில் பாஜக-அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் நிச்சயம் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.ரங்கசாமி அறிவித்திருந்தார். 

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் புதுச்சேரி உள்ளதா? அவ்வாறு புதுச்சேரி இருக்கும்பட்சத்தில், பாஜக தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுமா என்று பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது. ஆனால் என்.ஆர். காங்கிரஸுக்கு தனியாகத் தொகுதி ஒதுக்கினால் அதிமுக போட்டியிடும் எண்ணிக்கை மேலும் குறையும் நிலை உருவாகியுள்ளது. 

இதனிடையே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமகவின் நிலையை எண்ணி அந்த கட்சியின் தொண்டர்கள் கொந்தளிப்பில் இருந்து வருகின்றனர். மேலும் மாநில மகளிரணி பொறுப்பாளர் கட்சியில் இருந்து விலகினார். யார் எப்படி போனால் என்ன அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலையில்லை. தங்களுக்கு அடிமைகள் கிடைத்துவிட்ட உற்சாகத்தில் உள்ள தமிழக பாஜக, தங்களுக்கான 5 தொகுதிகள் எவை? அதற்கான வேட்பாளர்கள் யார்? என்பதை தேர்வு செய்துவிட்டனர். 

தமிழக பாஜக சார்பில் போட்டியிடுவர்கள் விவரம் மற்றும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதில் கன்னியாகுமாரியில் பொன்.ராதாகிருஷ்ணனும், நெல்லையில் நைனார் நாகேந்திரன், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணன், திருப்பூரில் வானதி சீனிவாசன், திருச்சி அல்லது தென் சென்னையில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இதில், கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி வேட்பாளர்கள் கிட்டதட்ட உறுதியாவிட்டனர். திருச்சி தொகுதியை கைப்பற்ற கருப்பு முருகானந்தமும், திருப்பூர் தொகுதியை எச்.ராஜா கைப்பற்றவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

click me!