#BREAKING ஜூன் 24ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்... அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 21, 2021, 1:26 PM IST
Highlights


சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவுற்ற பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 133 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று ஒரு மாதம் முடிவடைந்துள்ள நிலையில், இன்று அவருடைய தலைமையில் முதல்  சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக 16வது சட்டமன்ற கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. 

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையில் கொரோனா 3வது அலைக்கு நிதி ஒதுக்கீடு, தமிழகத்தின் நிதி நிலை குறித்து ஜூலையில் வெள்ளை அறிக்கை, இட ஒதுக்கீடு, நீட் தேர்வு, நீர் மேலாண்மை, வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. எளிமையான வாழ்க்கை வாழுங்கள், இது ஊழலை அகற்றிவிடும், இது என செய்தி என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழில் அறிவுறுத்தினார். அதன் பின்னர் தமிழ் இனிமையான மொழி, வணக்கம் எனக்கூறி தன்னுடைய உரையை தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆங்கிலத்தில் உரையை வாசித்து முடிக்க, அதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு தமிழில் உரையை வாசித்தார். 

 

இதையும் படிங்க: முடியவே முடியாது... மூணு கோடி எக்ஸ்ட்ரா வேணும்... கறார் காட்டும் பிரபல நடிகை...!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவுற்ற பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது., அதன் படி ஜூன் 24ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ளது. மே 24ம் தேதி அன்று ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேச உள்ளார் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 

click me!