அசராத சசிகலா... ஆட்டம் காட்டும் எடப்பாடி... அதிமுக என்னவாகும்..?

By Thiraviaraj RMFirst Published Jun 21, 2021, 11:55 AM IST
Highlights

கட்சி தொண்டர்கள் எல்லாத்தையும் பார்ப்பேன். அம்மா மாதிரி கட்சியை நிச்சயம் கொண்டு வந்துடுவேன். நிச்சயம் ஆட்சியை பிடிப்போம் என சசிகலா பேசியுள்ளார்.

கட்சி தொண்டர்கள் எல்லாத்தையும் பார்ப்பேன். அம்மா மாதிரி கட்சியை நிச்சயம் கொண்டு வந்துடுவேன். நிச்சயம் ஆட்சியை பிடிப்போம் என சசிகலா பேசியுள்ளார்.

சசிகலா தினமும் தொண்டர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார். அந்தவகையில் திருவாரூரை சேர்ந்த விஷ்வா கணேஷ் என்ற தொண்டரிடம் சசிகலா பேசியனார். அந்த ஆடியோவில், ‘’எல்லாம் பயத்துல ஏதேதோ பேசிகிட்டு இருக்காங்க. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அம்மாவை இப்படித்தான் கட்டம் கட்டி பேசிக்கிட்டு இருந்தாங்க. ஆனால் கடைசியில என்ன ஆச்சு. தொண்டர்கள் எல்லாரும் அம்மாகூட தான் நின்னாங்க.

நினைச்சபடி அம்மா வந்தாங்க. அதனால பேசட்டும். பேசட்டும். இவங்க பேசுறதெல்லாம் பார்த்தா, தொண்டர்களோட எழுச்சிய பார்த்து பயந்து போயிருக்காங்கனு தான் எனக்கு தெரியுது. தொண்டர்கள் நம்ம பக்கம் தான் இருக்காங்க. பாத்துக்கலாம். ஊரடங்கு முடிஞ்சதும் நான் வந்துடுவேன். கவலையே படாதீங்க.” எனக் கூறியுள்ளார். 

அதேபோல சென்னை துறைமுகம் பகுதியைச் சேர்ந்த நிலோபர் வார்னிங், தேனியை சேர்ந்த சின்னசாமி, ஈரோட்டை சேர்ந்த செல்வம் ஆகிய தொண்டர்களுடனும் சசிகலா பேசினார். அதன்படி, தொண்டர் பேசுகையில், “எப்போம்மா நீங்க வருவீங்க. எல்லாமே இங்க தப்பா நடந்துகிட்டு இருக்கு. வேகமா வாங்கம்மா.

சசிகலா : கட்சி தொண்டர்கள் எல்லாத்தையும் பார்ப்பேன். அம்மா மாதிரி கட்சியை நிச்சயம் கொண்டு வந்துடுவேன். நிச்சயம் ஆட்சியை பிடிப்போம். கவலையே படாதீங்க. ஊரடங்கு முடிந்ததும் நிச்சயம் வந்துடுவேன். தொண்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமா நிச்சயம் நடந்துக்குவேன்.

தொண்டர்: நீங்க வளர்த்துவிட்ட ஆளுங்களே இப்போ நன்றி இல்லாம உங்களை பத்தி பேசுறாங்களேம்மா?

சசிகலா: என்ன பண்றது. விடுங்க, ஒண்ணும் கவலைப்படாதீங்க. கட்டாயம் வருவேன். தொண்டர்களை கைவிட மாட்டேன். தலைவரும் (எம்.ஜி.ஆர்) சரி, அம்மாவும் சரி தொண்டர்களை நம்பித்தான் கட்சியை நடத்தினாங்க. மரியாதை கொடுத்தாங்க. எனவே விரைவில் வந்து நான் எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன். கவலையே படாதீங்க.

தொண்டர்: கட்சியில் சாதி பாகுபாடு பாக்குறாங்கம்மா.

சசிகலா: தொண்டர்கள் இனியும் கஷ்டபடுறத பாத்துக்கிட்டு சும்மா இருக்கமாட்டேன். இந்த கட்சிக்கு தொண்டர்கள் தான் அஸ்திவாரமே. எல்லா இனத்தவரும் நமக்கு வேணும். சாதி ரீதியாக பாக்காம, அம்மா எப்படி கொண்டு போனாங்களோ, அதே மாதிரி இந்த கட்சியை நான் கொண்டு போவேன். தொண்டர்கள் என் கூட இருக்கும்போது எனக்கென்ன கவலை. மக்களும் நல்லதையே நினைக்கிறாங்க. இந்த கட்சி அழியுறதுக்கு விடமாட்டேன். தொண்டர்களின் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும். சீக்கிரம் தொண்டர்களை சந்திப்பேன்” எனக் கூறியுள்ளார். 

click me!