இவர்தாங்க தமிழகத்தின் அம்பேத்கர்… திருமாவளவனை புகழ்ந்து தள்ளிய தலைவர் !!

Published : Jan 24, 2019, 06:26 AM ISTUpdated : Jan 24, 2019, 06:53 AM IST
இவர்தாங்க தமிழகத்தின் அம்பேத்கர்… திருமாவளவனை புகழ்ந்து தள்ளிய தலைவர் !!

சுருக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு ஜாதிக் கட்சித் தலைவர் அல்ல என்றும் அவர் தமிழகத்தின் அம்பேத்கர் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பாராட்டித் தள்ளியுள்ளார்.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் சனாதன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு இன்று நடைபெற்றது.

 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்  இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியாவில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை கொண்டு வர வேண்டும் உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய தமிழக காங்கிரஸ்  தலைவர் திருநாவுக்கரசர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் என்று கூறினாலே தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் அவர் ஒரு ஜாதிக்கட்சியின் தலைவர் என்பது தெரியும். ஆனால் திருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல என்றும், அவர் தமிழகத்தின் அம்பேத்கர் என்றும் கூறினார்.

இந்த மாநாட்டில் சீதாராம் யெச்சூரி, மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், வைகோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

ராமதாஸ், சீமான் போன்று விவசாயத்துக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கும் விஜய்..! நல்ல விஷயம் என மகிழும் கொங்கு மக்கள்
செங்கோட்டையன் நமது பலம்..! தூக்கி தலை மேல் வைத்துக் கொண்டாடிய விஜய்