தேசம் காப்போம் மாநாட்டில் அதிரடியாக நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்! திருச்சியை திணறடித்த விசிக !!

By sathish kFirst Published Jan 23, 2019, 9:20 PM IST
Highlights

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் சனாதன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடக்கிறது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தி.மு.க. கூட்டணி அகில இந்திய அளவில் விரிவடையும், வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த மாநாடு நடந்து வருகிறது. இந்தியாவில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை கொண்டு வர வேண்டும் உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டு தீர்மானங்களை திருமாவளவன் வாசித்தார்.  

1.முதல் தீர்மானமாக கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 2. அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம். 
3. சமூக நீதியை பாதுகாப்போம். 
4.வகுப்புவாத வன்முறை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
5. ஆணவக் கொலைகளை கட்டுப்படுத்த தனிச் சட்டம் இயற்ற வேண்டும். 
6. சபரிமலை தீர்ப்பை வரவேற்போம். 


7. எழுத்தாளர் கல்புர்கர் கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய பயங்கரவாதத்தை தடை செய்ய வேண்டும். 
8.மேகதாது அணை கட்ட ஆய்வுக்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 
9. அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். 
10. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.  
11. இந்தியாவில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை கொண்டு வர வேண்டும்  என14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ‘தேசத்தை பாதுகாப்போம்’ என்ற பெயரில் மாநாடு திருச்சியில் நடந்த இந்த மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துவை மாநில முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், மாநாட்டில் மார்க்சிஸ்ட் அகில இந்திய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

click me!