தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு... அமைச்சர் வெளியிட்ட தகவலால் பீதியில் பொதுமக்கள்...!

By vinoth kumarFirst Published Mar 18, 2021, 10:12 AM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் அலை ஏற்பட்டால் மீண்டும் முழு ஊரடங்க பிறப்பிக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட்ட தகவலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் அலை ஏற்பட்டால் மீண்டும் முழு ஊரடங்க பிறப்பிக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட்ட தகவலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்தே பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 15ம் தேதி 759 பேர், 16ம் தேதி 867 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 945 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையிலும் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதில் பெரும்பாலான கட்சிகள் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில்லை. மாஸ்க் கூட அணியாமல், அதிகப்படியான மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதால் கொரோனா பரவலின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆவடியில் போட்டியிடும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அத்தொகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் தேர்தல் பணிமனையை தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதிகளை பத்தாண்டு கால ஆட்சியில் ஏன் நிறைவேற்றவில்லை என்று மக்கள் கேட்பதில் நியாயம் இருப்பதை ஒப்புக்கொண்டார்.

ஆனாலும், கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை அதிமுக அரசு நிறைவேற்றி இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் அலை ஏற்பட்டால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!