மீண்டும்… மீண்டும் தலய சீண்டும் தமிழிசை !!

Published : Jan 24, 2019, 07:11 AM IST
மீண்டும்… மீண்டும் தலய சீண்டும் தமிழிசை !!

சுருக்கம்

தமிழிசை முன்னிலையில்  2000 அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்துள்ளதாக தற்போது சமூகவலைத்தளங்களில்  தகவல் வெளியாகி அது தற்போது வைரலாகி வருகிறது

கடந்த 2 நாட்களுக்கு முன்புதான்  அஜித் அவ்வளவு தெளிவா ஒரு அறிக்கை விட்டாரு, எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஆசை இல்லை, நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை, கடைசியாக எனது அதிகபட்ச அரசியல் தொடர்பு ஒரு சராசரி இந்தியனாக வரிசையில் நின்று வாக்களிப்பதே'. என அறிக்கையில் தமிழிசைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அஜித்தின் இந்த அறிக்கைக்கு வீராப்பாக பதிலளித்த தமிழிசை நாங்கள் அஜித்தை பாஜகவில் இணைய அழைக்கவில்லை என தெரிவித்தார். அஜித் அரசியல்தான் வேண்டாம் என்றாரே தவிர பாஜகவை எதிர்க்கவில்லை. நாங்கள் ஒன்றும் அவருக்கு  நூலும் விடவில்லை கயிறும் விடவில்லை என ஹெச் ராஜாவின் பேச்சும்  சர்ச்சைக்குள்ளானது.

இந்த விவகாரம்  கொதித்துக் கொண்டிருக்கும்போதே,  தமிழிசை மீட்டிங் ஒன்றில்  2000 அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்துள்ளதாக  தற்போது சமூகவலைத்தளங்களில்  இந்த தகவல்  வைரலாகி வருகிறது. 

அதோடு, நல்ல நடிகரின் ரசிகர்களாகிய நீங்கள் இனி நல்ல தலைவரை பின்பற்றுங்கள் என தமிழிசை அறிவுரை கூறியதகாவும்  தகவல் கிடைத்துள்ளது. இந்த செய்திக்கு  அஜித் தரப்பிலிருந்து என்ன அறிக்கை வரப்போகிறதோ என அரசியல் வட்டாரத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!