
பாடலாசிரியர் ஆனார் தமிழிசை...! பரபரப்பான அரசியலில் அடுத்த அவதாரம்..!
தமிழில் திரைக்கு வரும் ‘திரு.வி.க.பூங்கா’ என்ற படத்தின் டீசர் வெளியீட்டுவிழாவில் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
எஸ்.எம்.செந்தில் தயாரித்து இயக்கி நடித்தும் வெளிவரும் இந்த படம் இளைஞர்களின் தற்கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய ‘திரு.வி.க. பூங்கா’ படம் பற்றி இயக்குனர் எஸ்.எம்.செந்தில், இந்த படமானது இளைஞர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், வாழ்க்கையில் போராடி ஜெயித்த மாரியப்பனை விழாவுக்கு அழைத்தோம். சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் படத்தை வெளியிடமுடியாமல் தவிக்கிறோம் என தெரிவித்தார்.
மேலும் பேசிய இவர், இந்தப்படத்தில் பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஒரு பாடல் எழுதியுள்ளார். அந்தப் பாடலை டான்ஸ் மாஸ்டர் கலா பாடியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் மூலமாக தமிழிசை ஒரு பாடலாசிரியராக மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.