சுயநலத்திற்காக செயல்படவில்லை..!ஆதாரமற்ற குற்றச்சாட்டை என் மீது கூறுகிறார்கள்- தமிழிசை வேதனை

By Ajmal KhanFirst Published Jan 22, 2023, 10:08 AM IST
Highlights

தன் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும், தான் சுயநலத்திற்காக எதையும் தான் செய்வதில்லையென புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசைக்கு எதிராக போஸ்டர்

புதுச்சேரியில் பட்டைய கணக்கியல் மாணவர்களின் இரண்டு நாள் மெகா மாநாடு நடைபெற்றது. அந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  பட்டயக் கணக்காளர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான பங்கு வகிப்பதாக கூறினார். வரி செலுத்தவில்லை என்றால் நாடு முன்னேறாது. கணக்காளர்கள் அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறார்கள். கணக்காளர்கள் இல்லை என்றால் இன்று எதுவும் செய்ய முடியாது என்ற சூழ்நிலை உருவாகி இருப்பதாக தெரிவித்தார்.

அறநிலையத் துறையை கலைத்து விட்டால் கோவில்களை பராமரிப்பது யார்.? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு

சுயநலத்திற்காக செயல்படவில்லை

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம்  பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் புதுச்சேரியில் ஆளுநர் வெளியேறுமாறும், அவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தன் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக வேதனை தெரிவித்தார்.  புதுச்சேரியில் ரேஷன் கடை பிரச்சினை நீண்ட நாட்களாக இருப்பதாக தெரிவித்தார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மூடப்பட்டதாக தெரிவித்தவர், இதனை சரி செய்யும் வகையில் குழு அமைத்துள்ளதாக தெரிவித்தார்.  இது தொடர்பான உண்மைகளை சொன்னால் என் மீது தவறு கூறுவதாக தெரிவித்தார். இதில் அர்த்தம் இல்லை என்றவர் சுயநலத்திர்காக நான் எதையும் செய்வதில்லை மக்கள் நலனுக்காகத்தான் நான் செயல்படுகிறேன். நான் உண்மையாக பணியாற்றி வருகிறேன் என கூறினார். 

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவில்லை.! கூட்டணி கட்சி திடீர் அறிவிப்பு- அதிர்ச்சியில் இபிஎஸ்

புதுவையில் ஜி.20 மாநாடு கூட்டம்

தொடர்ந்து பேசிய அவர் ஜி20 மாநாடு வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், எல்லோரும் பெருமைடையவே இந்த மாநாடு நடைபெருகிறது, பல மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு வருகிறார்கள் இதில் பங்கேற்க உள்ள அவர்கள் நமது உணவு கலாச்சாரத்தை தெரியப்படுத்த உள்ளோம். இது நம் பெருமையை பறைசாற்றும் விதமாக அமையும் என தமிழிசை தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து.! அறநிலையத்துறை கலைக்கப்படும்..! அண்ணாமலை அதிரடி

click me!