சூடு பிடிக்கும் ஈரோடு தேர்தல் களம்..! திடீரென குஜராத்திற்கு சென்ற ஓபிஎஸ்.! என்ன காரணம் தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Jan 22, 2023, 8:50 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தங்களது கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினர் ஆதரவு திரட்டி வரும் நிலையில் ஓ.பன்னீர் செல்வம் திடீரென குஜராத் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது , திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்தில் உள்ளது.

Latest Videos

ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனியாக பிரிந்துள்ளனர். இந்த தேர்தலில் தங்கள் அணியின் பலத்தை காட்ட இரண்டு தரப்பும் போட்டி போட்டு வருகிறது. இதற்காக தங்களது கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவில்லை.! கூட்டணி கட்சி திடீர் அறிவிப்பு- அதிர்ச்சியில் இபிஎஸ்

குஜராத் சென்ற ஓபிஎஸ்

எனவே இந்த தேர்தல் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும்  மனோஜ் பாண்டியன் இன்று காலை திடீரென குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு விமானத்தில் புறப்பட்டு சென்றனர். ஓபிஎஸ்யின் பயணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது. குறிப்பாக பாஜக தலைவர்களை சந்திக்க செல்ல இருப்பதாக கூறப்பட்டது. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், அகமாதபாத்தில் தமிழ் சங்கம் நடத்தும் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள செல்வதாகவும், அரசியல் காரணங்களுக்காக செல்லவில்லையென தெரிவித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ள வைத்தார்.

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தல்.! காங்கிரஸ் வேட்பாளர் யார்.? எப்போது அறிவிக்கப்படும்?மேலிட பொறுப்பாளர் கூறிய பரபரப்பு தகவல்

click me!