தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து.! அறநிலையத்துறை கலைக்கப்படும்..! அண்ணாமலை அதிரடி

By Ajmal KhanFirst Published Jan 22, 2023, 7:50 AM IST
Highlights

கோயில்களை  நிர்வகிக்க இந்து சமய அறநிலையத்துறை  என்பது  தேவை இல்லாத  ஒன்று என தெரிவித்த அண்ணாமலை, 5,309 மாடுகள்  திருச்செந்தூர்  கோவிலில் மாடுகள் மாயம் ஆகி உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 
 

உண்டியல் பணத்தில் மிச்சர்

தமிழக பாஜகவின் ஆன்மீகம் மற்றும்  ஆலயமேம்பாட்டு பிரிவு சார்பில் தமிழக அரசின் இந்து விரோதப் போக்கை கண்டித்து  சென்னை வள்ளுவர்  கோட்டத்தில் உண்ணாவிரத  போராட்டம் நடைப்பெற்றது. பாஜகவினரின் உண்ணாவிரத போரட்டத்தை முடித்துவைத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், மைலாப்பூர்  கபாலீசுவரர்  கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை  சார்பில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில்  அதிகாரிகள் மிச்சர், பட்டர் முருக்கு சாப்பிட்டுகின்றனர், அதுவும் உண்டியல்  பணம்  தான் என கூறினார், மேலும் வடபழனி முருகன் கோயிலில் அக்குவா வாட்டர் உள்ளிட்டவைகளை வாங்க உண்டியல் பணம்  செலவு செய்து இருப்பதாகவும் இவை அணைத்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு கிடைத்த பதில் என கூறினார். 

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவில்லை.! கூட்டணி கட்சி திடீர் அறிவிப்பு- அதிர்ச்சியில் இபிஎஸ்

அறநிலையத்துறை தேவையில்லை

மதுரை  மீனாட்சி கோவிலில் உண்டியல்  காசு எடுத்து 30லட்சத்தில் கார் வாங்கப்பட்டு உள்ளது. 2021 ஆண்டில் 21கோடி கோயில் நிர்வாகத்தை தணிக்கை செய்ய 70கோடி பணத்தை  எடுத்து உள்ளனர். 5,309 மாடுகள்  திருச்செந்தூர்  கோவிலில் மாடுகள்  மாயம் என தணிக்கை  துறை  ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோயில்களை  நிர்வாகிக்க இந்து சமய அறநிலையத்துறை  என்பது  தேவை இல்லாத  ஒன்று என கூறினார். கோவில் மூலமாக1600கோடி ரூபாய் பணம்  இந்துசமய  அறநிலையத்துறைக்கு ஆண்டுதோறும்  வருகின்றது. திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை ஒரு சிலையை கூட மீட்டு கொண்டு வரவில்லை இருந்தால்  ஒரு ஆவணத்தை காட்ட வேண்டும் என சவால் விடுத்தார். 

அதிமுகவுக்கு ‘நோ’! ஈரோடு கிழக்கு தொகுதியில் மலரும் தாமரை! அண்ணாமலை வேட்பாளர்.? டெல்லி போடும் புது கணக்கு

முதல் கையெழுத்து -அண்ணாமலை

இலங்கை யாழ்பாணத்தில் ஒரு ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து சாமி தரிசனம் செய்ய முடியும்  ஆனால் தமிழகத்தில் அப்படி முடியாது. இந்து சமய அறநிலை துறை  அமைச்சர் எப்படி இந்த துறை  எப்படி நடத்த வேண்டும் என்று யோசனை சொல்ல தயாராக  உள்ளோம்.  விவாதம்  நடத்த தயாராக  உள்ளதாக கூறிய அவர்,  தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை என்பது  இருக்காது அதற்கு  முதல்கையெழுத்து பாஜக அமைச்சர் போடுவார் என அண்ணாமலை உறுதிபட தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஆன்மீக உணர்வுகளை புண்படுத்தும் திறனற்ற திமுக.. அறமற்ற அறநிலையத்துறை கண்டித்து பாஜக எடுத்த அதிரடி முடிவு..!

click me!