பதவியை ராஜினமா செய்தார் தமிழிசை!? தொண்டர்கள் அதிர்ச்சி!

First Published May 19, 2018, 12:25 PM IST
Highlights
tamilisai soundararajan resign her tamilnadu bjp leader posting


தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் பாஜகவுக்கும் பாஜகவின் நிலைப்பாடுகளுக்கும் தமிழக பாஜக தலைவர் என்ற முறையில் ஆதரவாகத் தமிழிசை பேசிவந்தாலும், கடந்த சில நாட்களாகவே மன வேதனையில்தான் இருக்கிறாராம்.

இதுவரை பாஜகவின் செயல்பாடுகள் அனைத்து தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகத்தான் இருக்கு. ஆனாலும் அதையெல்லாம் நான் பொறுத்துக்கிட்டுதான் பஜகவிற்க்காக தொண்டத்தண்ணி வத்தக் கத்திக்கொண்டு இருந்தேன்.

அப்படி நான் கட்சிக்காக பேசும் ஒவ்வொரு கருத்துக்கும், சமூக வலைதளங்களில் என்னுடைய போட்டோஸ மீம்ஸ் போட்டு எவ்வளவு அசிங்கப்படுத்திட்டு இருக்காங்க.  அதையும் நான் பொறுத்துக்கிட்டேன். இதெல்லாம் எதற்காக? நான் கஷ்டப்பட்டு இப்படி செய்துகொண்டிருந்தாலும், ஹெச்.ராஜா போன்ற ஆட்களினால் தமிழகத்தில் உள்ளவர்களிடம் நாள்ளு நாள் பாஜக கெட்டபெயரை எடுத்து வந்தது.

இவ்வளவு கஷ்டப்பட்டு நான் கட்சிக்காக உழைத்தாலும் அதற்கான மரியாதையும் அங்கீகாரமும் இதுவரை எனக்குக் கொடுக்கப்படவே இல்லை. அதனால் நான் இந்த பதவியில் இருந்து விலகிக்கிறேன். நீங்க வேறு யாரையாவது தலைவராக நியமிச்சுடுங்க. நான் சாதாரண ஒரு ஆளாகவே இருந்துட்டுப் போறேன்’ என புலம்பிக்கொண்டே தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் கொடுத்திருக்கிறார் தமிழிசை.

ஆனால் டெல்லி மேலிடம் அதையெல்லாம் ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளாமல்,  தமிழிசையைச் சமாதானப்படுத்தினார்களாம். ஆனால், தமிழிசை எதற்கும் சமாதானம் ஆகவில்லையாம். அதெல்லாம் இருக்கட்டும்,  நீங்க ராஜினாமா கடிதம் கொடுத்த விஷயத்தை ஊடகத்திற்கு சொல்லாமல் இருங்க, உங்க பொறுப்புக்குத் தகுதியான ஒருவரை நாங்க செலக்ட் பண்ற வரைக்கும் நீங்க எப்பவும்போல நீங்களே தலைவரா உங்க வேலையை செய்ங்க. அதுக்குப் பிறகு கட்சியே அறிவிக்கும்’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.

அதன் பிறகுதான் தமிழகத் தலைவராக யாரை நியமிக்கலாம் என தீவிர ஆலோசனை நடந்திருக்கிறது. இதனையடுத்து சென்னை வந்த தமிழிசை தனது நெருங்கிய நண்பர்களிடம் பதவியை ராஜினாமா செய்த விஷயத்தை சொல்லி வருத்தபட்டாராம். அதேபோல இந்த விஷயம் பாஜக முக்கிய புள்ளிகளுக்கு சென்றடைந்ததாம். ராஜினாமா விஷயத்தால் தமிழிசை சௌந்தரராஜனின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

click me!