
கர்நாடக சட்டப் பேரவையில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்ட நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் க்கள் ஆப்சென்ட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்று மாலை முதலமைச்சர் எடியூரப்பா இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு முன்பு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இன்று பதவி ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தவிட்டிருந்தனர்.
இதையடுத்து தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட போபையா இன்று அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலில் முதலமைச்சர் எடியூரப்பா எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து எம்எல்ஏக்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆன்ந்த் சிங் மட்டும் பதவியேற்றுக் கொள்ளவில்லை. இதனால் அவர் இன்று மாலை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது.
இந்நிலையில் அமலாக்கத்துறை விவகாரம் ஒன்றில் ஆனந்த் சிங் சிக்கியுள்ளதாகவும், அதனால் அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறிப்படுகிறது. ஆனால் ஆனந்தி சிங்கின் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் கூறப்படுகிறது,