
தமிழ்நாடு பெரியார் வளர்த்த மண் அல்ல; பெரியாழ்வார் வளர்த்த மண் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் மதுரையில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது பேசிய தமிழிசை, தமிழ்நாட்டில் நாத்தீக அரசியலை அகற்றி ஆன்மீக அரசியலை கொண்டுவருவதே பாஜகவின் நோக்கம்.
தமிழ்நாடு பெரியார் வளர்த்த மண் அல்ல; பெரியாழ்வார் வளர்த்த மண். அதேபோல அண்ணா வளர்த்த தமிழ் அல்ல; ஆண்டாள் வளர்த்த தமிழ். நாத்தீகம் பேசும் இந்த மண்ணில், யார் ஆன்மீகம் பேசினாலும் பாஜக ஆதரிக்கும் என தமிழிசை தெரிவித்தார்.
தமிழிசை சௌந்தரராஜனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் மற்றும் அண்ணா குறித்த தமிழிசையின் கருத்துக்கு திராவிடர் கழகத்தினர் உட்பட பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து பேசிய தமிழிசை, கட்சியின் தலைவராக கூட ஆக முடியாத ஸ்டாலின், எப்படி முதல்வராக முடியும்? என தமிழிசை கேள்வியெழுப்பினார்.
மேலும் தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் பாஜக ஆட்சியமைய வேண்டும் எனவும் தமிழிசை கூறியுள்ளார்.