சட்டமன்றத்தில் மட்டுமல்ல... நாடாளுமன்றத்தில் அம்மாவின் சிலை திறக்கப்படும்! தினகரன் ஆதரவாளர் தடாலடி!

 
Published : Feb 13, 2018, 12:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
சட்டமன்றத்தில் மட்டுமல்ல... நாடாளுமன்றத்தில் அம்மாவின் சிலை திறக்கப்படும்! தினகரன் ஆதரவாளர் தடாலடி!

சுருக்கம்

Not only in the assembly but in the parliament! Dinakaran supporter talk

தமிழக சட்டமன்றத்தில் மறைந்த ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்தது மட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் சிலை வைப்பதற்காக போராடி வருவதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் நேற்று சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால், ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்து வைத்தார். சட்டமன்றத்தில், மறைந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தைத் திறந்து வைக்க எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திமுக செயல் தலைவரும்,
எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதேபோல், டிடிவி தினகரனும், சட்டமன்றத்தில் இவ்வளவு அவசரமாக ஜெயலலிதா புகைப்படம் திறக்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி, சட்டமன்றத்தில் ஜெயலலிதா புகைப்படம் திறந்து வைத்துள்ளது குறித்து பிரபல வெப்சைட் ஒன்று பேட்டி கண்டது.

அப்போது பேசிய சி.ஆர்.சரஸ்வதி, அம்மாவின் புகைப்படத்தை சட்டமன்றத்தில திறந்து வைத்தது மகிழ்ச்சியான விஷயம். ஆனால், அம்மாவுக்கு எதராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியபோது தனது வீட்டில் பட்டாசு வெடித்து, ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடிய ஓ.பி.எஸ். மற்றும் கூடவே இருந்து துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் அம்மாவின் படம் திறக்கப்பட்டது என்பதைத்தான் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார்.

சட்டமன்றத்தில் அம்மாவின் படம் திறக்கப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் காங். எம்.எல்.ஏ. விஜதாரணி வரவேற்றுள்ளனர். இந்த இருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மற்றபடி படத்திறப்புக்கு எதிராக இருப்பவர்கள் எல்லாம் யார்? ஊழல் செய்யாத நல்லவர்களா? 2-ஜி வழக்கில் திமுகவுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துவிட்டால், திமுக நல்ல கட்சியாகிவிடுமா? ஊழலின் மொத்த உருவமே திமுகதான். அன்று அம்மாவுடன் கூட்டணி வைக்க அலைந்தவர்கள்தான் கம்யூனிஸ்டுகள். பதவிக்காக அடுத்தவர்களைத் தேடி வந்த கம்யூனிஸ்ட் கட்சியினர், இன்று அம்மா உருவப்பட திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பா.ம.க.வைச் சேர்ந்த அன்புமணி மேடல் எவ்வளவு ஊழல் வழக்குகள் இருக்கின்றன. இவங்க எல்லாம் அம்மாவைப் பார்த்து ஊழல்வாதின்னு சொல்றாங்க என்று காட்டமாக கூறினார்.

மேலும் பேசிய அவர், நீதிமன்றத்தில் அம்மாவுக்கு எதிராக தீர்ப்பு சொல்லியிருக்கலாம். ஆனால், அம்மா சிறைக்கு சென்று வந்த பின்பு, நடந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. அப்படி என்றால், மக்கள் மனதில் அம்மா என்றுமே நல்லவர்தான். மக்களுக்கு எதிராக எந்தவொரு செயலையும் அம்மா செய்தது கிடையாது. அதனால்தான் மக்கள்மனதில் அம்மா, தன்னிகரில்லாத் தலைவியாக வாழ்ந்து வருகிறார்.

போயஸ் கார்டன் இட்லலம், அரசியலுக்கு வந்து சம்பாதித்த சொத்து கிடையாது. அவர் சினிமாவில் கோலோச்சிய காலத்திலேயே வாங்கியது. ஆனால், இன்று பல கட்சிகள் மக்கள் பணத்தை எப்படி எல்லாம் கொள்ளை அடித்து வருகின்றன. எங்கள் அம்மாவைப் பற்றி குறை கூறுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? எங்கள் அம்மாவைப் பொறுத்தவரை அவர் ஊழல்வாதியோ, லஞ்சவாதியோ கிடையாது. மக்களுக்காக அனைத்தையும் துறந்து
எளிமையாக வாழ்ந்தவர். இவர்களுக்கு சட்டமன்றத்தில் உருவப்படம் திறந்தது மட்டுமல்ல; நாடாளுமன்றத்தில் சிலை வைப்பதற்காகவும் போராடி வருகிறோம். விரைவில் அது நிறைவேறும் என்றார்.

ஆனாலும், அதிமுக கட்சியை அழிக்க வந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் படத்திறப்பு என்பதைத்தான் எங்களாலும் தமிழக மக்களாலும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சி.ஆர்.சரஸ்வதி காட்டாமாக கூறியிருந்தார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!