
இந்தியாவின் பணக்கார மற்றும் குற்ற வழக்கு பின்னணியுள்ள முதல்வர்களின் பட்டியலை ஏடிஆர் என்ற ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் அதிகபட்சமாக 22 வழக்குகளுடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். இரண்டாவது இடத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் முன்றாவது இடத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் உள்ளனர்.
கிரிமினல் வழக்குகள் உள்ள முதல்வர்கள் பட்டியல்:
1. தேவேந்திர பட்னாவிஸ் (மகாராஷ்டிர முதல்வர்) - 22 வழக்குகள்
2. பினராயி விஜயன் (கேரள முதல்வர்) - 11 வழக்குகள்
3. அரவிந்த் கேஜ்ரிவால் (டெல்லி முதல்வர்) - 10 வழக்குகள்
4. ரகுபர் தாஸ் (ஜார்கண்ட் முதல்வர்) - 8 வழக்குகள்
5. அமரீந்தர் சிங் (பஞ்சாப் முதல்வர்) - 4 வழக்குகள்
6. யோகி ஆதித்யநாத் (உத்தர பிரதேச முதல்வர்) - 4 வழக்குகள்
7. சந்திரபாபு நாயுடு (ஆந்திர முதல்வர்) - 3 வழக்குகள்
8. சந்திரசேகர் ராவ் (தெலுங்கானா முதல்வர்) - 2 வழக்குகள்
9.நாராயணசாமி (புதுச்சேரி முதல்வர்) - 2 வழக்குகள்
10. மெஹபூபா (ஜம்மு-காஷ்மீர் முதல்வர்) - 1 வழக்கு
11. நிதிஷ் குமார் (பீகார் முதல்வர்) - 1 வழக்கு