
நேற்று ஜெயலலிதா உருவப்படம் திறந்ததன் தொடர்பாக பேசிய தினகரன், திமுகவையும், செயல் தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்கள் மத்தியில் தி.மு.க-வுக்கு பலம் இல்லை. ஸ்டாலின் நினைப்பது நடக்காது. அரசியலில் இனி அவருக்கு எதிர்காலமே கிடையாது. ஸ்டாலின் எப்படியாவது முதல்வராகி விடலாம் என நினைக்கிறார். தலை கீழாகவும் நின்று பார்க்கிறார். ஆனால் அவரால் முடியாது" என்றார் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக தொண்டர் ஒருவர் ஆர்.கே.நகர் தொகுதி MLA தினகரனை கிழி கிழி கிழி என கிழித்து தனது முகநூளில் ஒரு பதிவைப் போட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு...
இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சி, ஒன்றரை கோடி தொண்டர்கள் என வார்த்தைக்கு வார்த்தை கூறும் அதிமுக ஸ்டிக்க ஆளும் கட்சி என இவ்வளவு பெரிய பலம் இருந்தாலும், ஒரு இடைதேர்தல், சுயேச்சை வேட்பாளர், அதுவும் புதிய சின்னம் எப்படி இந்த படுதோல்வி? எப்படி வந்தது? ஹாவாலா ஸ்டைலில் அல்வா கொடுத்தது யாருக்கும் தெரியாதா இல்லை புரியாதா!
தொப்பி சின்னத்தில் வாக்குகேட்டபோது சுமார் 90 கோடியை கொட்டிய தினகரனின் பெயர் தொப்பியோடு ஒட்டிக்கொண்டது யாருக்கும் தெரியாதா?
தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடும்போது தினகரனுக்கு ஆதரவாக வாக்குகேட்ட சில அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் அதாவது அந்த ஸ்லீப்பர் செல்கள் தான் இந்த தினாவை ஜெயிக்க வைத்தது...
ஆனால், அதிமுக.,வினர் சிலர் இப்போது புலம்புவதுதான் வேடிக்கையான ஒன்று. அதிமுக.,வுக்கு என்றே வாக்களிக்கும் விசுவாசிகளும் கூட, தினகரனுக்கு ஓட்டு போட்டதால் தான் இத்தகைய வெற்றியை தினகரன் பெற முடிந்தது. அதற்காக, தினகரன் அடிக்கடி சொல்லும் ஸ்லீப்பர் செல்கள் அதிமுக.,வில் வேலை செய்தனராம். அதிமுக.,வுக்கு என்றே வாக்களிக்கும் நபர்களைக் கண்டறிந்து, அவர்களில் ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் ஒதுக்கி, ஒரு லட்சம் ஓட்டுகளும் அதிமுக.,வுக்குக் கிடைக்க வேண்டும் என்று வேலை செய்வதாக ஒரு செய்தி பரப்பப் பட்டது. அப்போது, அதிமுக., விசுவாசிகளிடமே போய் தினகரன் ஆதரவாளர்கள் ஒரு புரளியை கிளப்பியது என்னன்னா? அதிமுக., சார்பில் அந்த வீட்டில் உள்ளவங்களுக்கு ஒருவருக்கு 6ஆயிரம் வீதம், 4 பேருக்கு 24 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்காங்க.. நீங்க இவ்ளோ தூரம் அதிமுக.,வுக்கு விசுவாசியா இருக்கீங்க. ஆனா உங்களுக்குக் கொடுக்காம, அவங்களுக்கெல்லாம் கொடுத்திருக்காங்க... என்று, அதிமுக., விசுவாசிகளை சரியாகக் கண்டறிந்து புரளி பரப்பினார்களாம். இதனால், தங்களுக்கு பணம் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில், அதிமுக.,க்கு ஓட்டு போட்டு வந்த பலர் இந்த மோசடி மன்னனுக்கு மாற்றிப் போட வைத்தது தெரியாதா?
வெளிப்படையாகச் சொன்ன தண்டையார்பேட்டை பகுதி வாக்காளர் பெண் ஒருவர். எங்கள் வீட்டில் ஆறு ஓட்டுகள் உள்ளன. 'குக்கருக்கு' ஆதரவாக பிரசாரத்திற்கு போனதால், எங்களுக்கு அதிமுக.,வினர் ரூ.6 ஆயிரம் தரவில்லை. ஜெயலலிதா விசுவாசியான எங்களுக்கு பணம் கொடுக்காத கோபத்தில் குக்கருக்கு ஓட்டு போட்டோம்... என்று கூறியுள்ளார். இப்படி, எத்தனை எத்தனை தில்லுமுல்லு செய்தது இந்த குக்கர் பாய்ஸ்...
தம்பி! தினகரா! நீங்கள் கொஞ்சம் ஆர்.கே. நகர வீதியில் இறங்கி நடந்து பாருங்கள்!
உங்களது யோக்கியதை தெரியும்!
ஓட்டுக்கு டோக்கனை கொடுத்து நாட்டிலேயே பணத்தை கொடுக்காமல் அல்வா கொடுத்த மெகா மோசடி மன்னன் என உங்களை சொல்வது தெரியவில்லையா? மீண்டும் இந்தத் தமிழ்நாடு உன்னிடம் போனால் மக்கள் திருவோடுதான் ஏந்த வேண்டிவரும்!
ஜெயலலிதாவின் மரணம் என்கிற மாபெரும் மர்மம் உண்மை என்றாவது ஒருநாள் வராமலா போய்விடும்?! ஜெயலலிதா என்கிற மகாத் திமிர் பிடித்த அகந்தையாளியால் கொள்ளையர் கூடாரங்களாகிய அறிமுகமாகிய நீங்களெல்லாம் திமுக தலைவர்களை பற்றி பேசுகிற அளவிற்கு தமிழக அரசியலின் களம் தரமிழந்து போய்விட்டதே காரணம்!
அதிமுகவுக்காக தன் உயிரை! உடலை! உடமையை இழந்து தியாகங்கள் செய்த ஆரம்பகால திராவிட சொந்தங்கள் இன்று ஒதுங்கிப்போனதால் வந்தவினை நீயெல்லாம் கச்சை கட்டி அரசியல் பஜனை பாடவேண்டிய லட்சணத்தில் தமிழ்நாடு அரசியல் சீர்கெட்டு போய்விட்டதுடா!
ஆடு! உனது பணபலம்! இருக்கும் வரை நீ! ஆடு! முடிவுகள் நிச்சயமாக உனகெதிராக அமையுமென்பது உறுதி! காலங்கள் அதை தீர்மானிக்கும்! இவ்வாறு அந்த பதிவில் இருக்கிறது.