இதை மட்டும் செஞ்சா.. பஸ் கட்டண உயர்வே தேவைப்படாது!! பழனிசாமிக்கு ஐடியா கொடுத்த ஸ்டாலின்

 
Published : Feb 13, 2018, 12:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
இதை மட்டும் செஞ்சா.. பஸ் கட்டண உயர்வே தேவைப்படாது!! பழனிசாமிக்கு ஐடியா கொடுத்த ஸ்டாலின்

சுருக்கம்

stalin recommendations to chief minister to reform in transport

போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய ஆய்வறிக்கையை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமியிடம் வழங்கினார்.

போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வு, பராமரிப்பு செலவு ஆகியவற்றை காரணமாக காட்டி பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியது. 

இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது தொடர்பாக திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த ஆய்வறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமியை சந்தித்து வழங்கினார்.

முதல்வருடான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், 27 பரிந்துரைகள் அடங்கிய ஆய்வறிக்கையை முதல்வரிடம் கொடுத்துள்ளோம். போக்குவரத்து சேவையை சேவையாக கருதி, அதன்மூலம் ஏற்படும் இழப்புகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

கலால் வரி, மதிப்பு கூட்டுவரி ஆகியவற்றின் காரணமாகவே டீசல் விலை உயர்ந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு மாதந்தோறும் நல்லிணக்க முகாம்கள் நடத்த வேண்டும், மத்திய தொகுப்பு நிதியத்தின் மூலம் போக்குவரத்து கழகங்களை சீரமைத்திட வேண்டும் உள்ளிட்ட 27 பரிந்துரைகளை அளித்துள்ளோம்.

அதன்படி செயல்பட்டால், பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமே வராது. அதை செயல்படுத்துகிறார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம் என ஸ்டாலின் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!