சட்டையை கிழிச்சுக்கிட்டாலும் அது நடக்காது... மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த தமிழிசை..!

By vinoth kumarFirst Published May 1, 2019, 1:25 PM IST
Highlights

வெளிநடப்புகள், சட்டைகிழிப்பு, போட்டி சட்டமன்றம் நடத்தியும் பயனில்லை, இந்த நம்பிக்கை இல்லா தீர்மானமும் நம்பிக்கை தராறு என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

வெளிநடப்புகள், சட்டைகிழிப்பு, போட்டி சட்டமன்றம் நடத்தியும் பயனில்லை, இந்த நம்பிக்கை இல்லா தீர்மானமும் நம்பிக்கை தராறு என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். 

டிடிவி. தினகரனின் அமமுக கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருதாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 பேர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆதாரத்துடன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து 3 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனையடுத்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சட்டப்பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டரில் உங்கள்மீது தமிழக மக்களுக்கே நம்பிக்கையில்லை. எனவேதான் எதிர்க்கட்சியில் மக்கள் அமர வைத்துள்ளனர். வெளிநடப்புகள், சட்டைகிழிப்பு, போட்டி சட்டமன்றம் நடத்தியும் பயனில்லை. இந்த நம்பிக்கையில்லா தீர்மானமும் தங்களுக்கு மக்கள் நம்பிக்கையை பெற்றுதராது"  என்று திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். 

click me!