இதற்கெல்லாம் விடிவுகாலம் அன்னைக்குத்தான் பொறக்கப்போகுது... செம்ம தில்லாக நாள் குறித்த ஸ்டாலின்!

By sathish kFirst Published May 1, 2019, 1:19 PM IST
Highlights

வரும் 23ஆம் தேதி  22 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள அன்றைய தினம் இதற்கெல்லாம் விடிவுகாலம் வரப்போகிறது என தலைவர் ஸ்டாலின் சொன்னது திமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

வரும் 23ஆம் தேதி  22 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள அன்றைய தினம் இதற்கெல்லாம் விடிவுகாலம் வரப்போகிறது என தலைவர் ஸ்டாலின் சொன்னது திமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் தொமுச சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின், மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் சிவப்பு உடையில் ஊர்வலமாகச் சென்று மே தின நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மே தின சிறப்புப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய ஸ்டாலின், “தொழிலாளர் தினத்தை கொண்டாட உரிமையுள்ள ஒரே இயக்கம் திமுகதான். நாட்டின் காவலாளி என்று பிரதமர் மோடி சொல்லலாம். ஆனால் அவர் காவலாளி அல்ல, களவாணியாகவே உள்ளார். திமுகதான் இந்த நாட்டின் காவலாளியாக, ஒட்டுமொத்த தொழிலாளர்களின் காவலாளியாக தொடர்ந்து இருந்துவருகிறது என்றார்.

மேலும், “மத்திய, மாநில ஆட்சிகளில் தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைகள் எந்தளவுக்கு நசுக்கப்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. உரிமைக்காக போராடக்கூடியவர்கள், இரண்டு ஆட்சிகளிலும் தடியடி பிரயோகம், சிறையில் அடைத்தல் என பல கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். 

டெல்லியில் போராடிய விவசாயிகளை ஆறுதலுக்குக் கூட அழைத்துப் பேசவில்லை பிரதமர் மோடி. மின்வாரிய ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்களை வழங்க முடியாத அரசாக தமிழக அரசு இருந்துகொண்டிருக்கிறது. 45 கோடி தொழிலாளர்களின் உரிமைகளை நான்கைந்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடகு வைக்கக் கூடிய நிலைக்கு மத்திய ஆட்சி சென்றுள்ளது என்று விமர்சித்த ஸ்டாலின்,

இவற்றிற்கு விடைகாணக் கூடிய வகையில் வரும் 23ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் இதற்கெல்லாம் விடிவுகாலம் வரப்போகிறது. அன்றைய தினத்தை எதிர்நோக்கிக் காத்திருப்போம் என்றும் கூறி உரையை நிறைவு செய்தார்.

click me!