
மத்திய அரசை விமர்சிக்கும் தமிழக அரசியல் கட்சிகளை விமர்சித்து கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், திமுக ஆட்சியில் தனியார் ஆங்கில பள்ளி கட்டினீர், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டினீர், ஆனால் தண்ணீருக்காக அணைகள் கட்டினீரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்வதை சுட்டிக்காட்டி, மோடி அரசுக்கு எதிராக கீழடி பற்றி பேசிய ஸ்டாலினும் கம்யூனிஸ்டுகளும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் நம்பவைத்து மத்திய அரசு கழுத்தை அறுத்ததாக ஸ்டாலின் விமர்சித்ததற்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை இறுதிப்போரில் போர் நின்றுவிடும் என நம்பவைத்து சரணடைய செய்தது திமுக தான் என விமர்சித்துள்ளார்.
வாரிசு அரசியல், குடும்ப ஆட்சி இவைதானே திமுக, திராவிடர் கழகம், பாமக உள்ளிட்ட கட்சிகள் பேசும் சமூக நீதி? என கேள்வி எழுப்பியுள்ளார்.