தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் காலமானார்.. துயரத்தை ட்விட்டரில் வெளியிட்டு கண்ணீர் !

Published : Aug 18, 2021, 09:08 AM ISTUpdated : Aug 18, 2021, 09:34 AM IST
தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் காலமானார்.. துயரத்தை ட்விட்டரில் வெளியிட்டு கண்ணீர் !

சுருக்கம்

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தராஜனின் தாயார் காலமானார்.  

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியும், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை ஆளுநருமான தமிழிசை சவுந்தராஜனின் தாயாருமான கிருஷ்ணகுமாரி வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். இந்தத் தகவலை ட்விட்டரில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதில், “என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்... 
என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 04.00 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு, நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!