எங்கே போனாய் ராசா... நீலகிரி வெள்ளத்தில் எஸ்கேப் ஆனார் லேசா...! தமிழிசை தாறுமாறு கேள்வி...!

By ezhil mozhiFirst Published Aug 10, 2019, 6:23 PM IST
Highlights

கடந்த ஒரு வாரகாலமாக நீலகிரியில் பெய்து வரும் கனமழைக்கு அங்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

நீலகிரி மாவட்டத்தில் இடைவிடாத அடைமழை பெய்து மக்கள் அங்கு அவதிபட்டு வரும் அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.ராசாவை அந்த மக்கமே காணவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சுட்டிகாட்டியுள்ளார்.

கடந்த ஒரு வாரகாலமாக நீலகிரியில் பெய்து வரும் கனமழைக்கு அங்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக எப்போதும் இல்லாத அளவிற்கு அவலாஞ்சியில் கொட்டித்தீர்த்த கனமழையால் அந்தபகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது, தொடர் மழையின் காரணமாக அங்கு மின்சாரம் துண்டுக்கப்படுள்ளது, சாலைகளில் தண்ணீர் தேங்குவந்தால் போக்குவரத்தும் முடங்கி உள்ளது, குறிப்பாக நீலகிரி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி உள்ளது.

அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள அவலாஞ்சியில் மக்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர், அவர்களுக்கு எலிகேப்டரில் உணவு பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் கூறியுள்ளார், இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தன் டிவிட்டர் பக்கத்தில்  கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், நீலகிரி மாவட்டத்தில் இடைவிடாத அடைமழையால் ஏற்பட்ட பேரிடர்களால் மக்கள் அல்லல்படும்போது  தமிழ அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவை தொகுதி பக்கம் காணவில்லை என்று தமிழிசை சாடியுள்ளார்

 

நீலகிரி மாவட்டத்தில் இடைவிடாத அடைமழையால் ஏற்பட்ட பேரிடர்களால் மக்கள் அல்லல்படும் போது தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடவேண்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவை காணவில்லை. https://t.co/w3nUhqLgPR

— BJP Tamilnadu (@BJP4TamilNadu)

தேர்தலில் வெற்றிபெறும் வரை மக்களை தேடி வருவார்கள் வெற்றிபெற்ற பிறகு அவர்களுக்கு மக்கள் தேவையில்லை போலும் என்று தமிழிசையின் கருத்தை அமோதித்து ஆ. ராசாவை இணையத்தில் சாடிவருகின்றனர்.

click me!