தரமான சரக்கு... ரெட்லைட் ஏரியா... ஏற்பாடு செய்துதருவதாக சொன்னவருக்கு 2530 ஒட்டு...!அதிமுகவுக்கு ஆப்புவைத்த குடிகாரர்கள் சங்கம்...!

By ezhil mozhiFirst Published Aug 10, 2019, 6:10 PM IST
Highlights

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக - திமுகவிடையே கடுமையான போட்டி நிலவிவந்த நிலையில் வெற்றியை நூலிழையில் தவறவிட்டுள்ளது அதிமுக

தரமான சரக்கு... ரெட்லைட் ஏரியா... ஏற்பாடு செய்துதருவதாக சொன்னவருக்கு 2530 ஒட்டு...!

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவை தேல்வியடைய வைத்தது திமுக அல்ல நான்தான் என மார்தட்டுகிறார், தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கத்தின் மாநிலத்தலைவர் செல்லப்பாண்டியன் ,தான் பெற்ற 2530 வாக்குகளை அதற்கு காரணமாக சொல்கிறார் அவர்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக - திமுகவிடையே கடுமையான போட்டி நிலவிவந்த நிலையில் வெற்றியை நூலிழையில் தவறவிட்டுள்ளது அதிமுக,  ,திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, உட்பட சுமார்  28 வேட்பாளர்கள் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டனர் அதில்  ஒருவர்தான் தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கத்தில் மாநிலத்தலைவர் செல்லபாண்டியன், டாஸ்மாக் கடைகளை முட வேண்டும் என தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்தபோது, டாஸ்மாக் கடைகளை மூடக்கூடாது என வலியுறுத்தி, மது பிரியர்களுக்காக ஆதரவாக கட்சி நடத்தி வருகிறார் செல்ல பாண்டியன். 

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய கொய்யா பழ மாலையுடன் வந்து அசத்திய அவர்  செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார், மது அருந்துபவர்கள்  கொய்யா பழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பதால் சிம்பாலிக்காக கொய்யாபழ மாலையுடன் வந்திருப்பதாக அன்று அவர் கூறினார், நான் தேர்தலில் வெற்றி பெற்றால் மது பிரியர்களுக்கு தரமான மது கிடைக்க ஏற்பாடு செய்வேன், அத்துடன் ரெட் லைட் ஏரியாக்கள் தொடங்க பாடுபடுவேன் என்றும் எடக்கு முடக்காக பேசி அதிர்ச்சி ஊட்டினார்.

மற்ற கட்சியினரைப்போல் தன் கொள்கைகளை எடுத்து கூறி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் சுமார்  2530 வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளனர்.  இந்நிலையில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் , 2530 வாக்குகள் அள்ளி தந்தமைக்கு  நன்றி, நன்றி, நன்றி, வேலூர் நாடாளுமன்ற மக்களுக்கும்  டாஸ்மாக் மது பிரியர்களின்  குடும்பங்களுக்கும்  இதய பூர்வமான நன்றியை தங்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.என் முயற்ச்சிக்கு உறுதுணையாக உள்ள ஏல்லோருக்கும் நன்றி என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!