திமுகவிற்கு மக்கள் கொடுத்தது "எச்சரிக்கை"...! அடுக்கு மொழியில் பேசி அதிரடி காட்டிய டி.ராஜேந்தர்..!

By ezhil mozhiFirst Published Aug 10, 2019, 5:56 PM IST
Highlights

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசய நிகழ்வான அத்தி வரதர் வைபவம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அத்தி வரதர் தரிசனம் முடித்துக்கொண்டு வேலூரில் திமுக வெற்றி பெற்றதை பற்றியும் கருத்தை தெரிவித்தார் டி.ராஜேந்தர்

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசய நிகழ்வான அத்தி வரதர் வைபவம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்தி வரதரை காண்பதற்காக தினந்தோறும் பல லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து குவிகின்றனர். அந்த வரிசையில் பெரும் அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் அடங்குவர்.

இந்நிலையில் அத்தி வரதரை தரிசனம் செய்வதற்காக காஞ்சிபுரம் சென்றிருந்த டி ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் டி ராஜேந்திரன். அதில் அத்தி பூத்தாற்போல என்று சொல்வார்கள்... அந்த அளவிற்கு அதிசயமான ஒரு நிகழ்வு இது தான். தற்போது அத்திவரதர் பூத்து உள்ளார். அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.. அதிர்ஷ்டம் கொடுக்க வேண்டும்... மக்கள் அத்தி வரதரை காண கஷ்டப்பட்டு போகவில்லை இஷ்டப்பட்டு போகிறார்கள்..

நடந்து முடிந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுகவின் வெற்றியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறவில்லை.. சொற்ப எண்ணிக்கையான வெறும் 8000 வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதை எப்படி மாபெரும் வெற்றியாக பார்க்க முடியும்? இது வெற்றி மட்டுமல்ல... இது ஒரு எச்சரிக்கை. திமுகவிற்கு மக்கள் முழுவதும் கொடுக்கவில்லை "கை"  இது ஒரு எச்சரிக்கை என அடுக்குமொழி வசனங்களை பேசி அசத்தினார்.

மேலும் வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதியில் மிக மிக குறைவான ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்திலும், 800 ஓட்டுகள் வித்தியாசத்தில் மட்டுமே திமுக முந்தி உள்ளது என்பதை கருத்தில் கொண்டு இதனை பெரும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்வது நல்லது என லட்சிய திமுக தலைவராக பேசினார்.

click me!