நீட் தேர்வில் சூப்பர் மதிப்பெண் !! ஏழை மாணவியின் மருத்துவக் கல்லூரி கட்டண செலவை ஏற்றுக்கொண்ட தமிழிசை !! குவியும் பாராட்டு…

By Selvanayagam PFirst Published Jun 7, 2019, 10:12 PM IST
Highlights

நீட் தேர்வில் 720 க்கு 605 மதிப்பொண் பெற்று வெற்றி பெற்ற  சென்னையைச் சேர்ந்த ஏழை தையல் தொழிலாளி  மகள் மாணவி ஜீவிதாவின் மருத்துவக் கல்லூரி கட்டண செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை  அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிக பாஜக தலைவர் தமிழிசை நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் என பேசி வருகிறார்.

இந்நிலையில் இந்த  ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில் சென்னை அனகாபுதூரைச் சேர்ந்த தையல் தொழிலாளி பன்னீர்  செல்வத்தின் மகள் ஜீவிதா நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் பெற்றார்.

ஜீவிதா நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் மருத்துவக் கல்லூரியில்  படிக்கும்  அளவுக்கு வசதி இல்லை. இது குறித்து நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த தமிக பாஜக தலைவர் தமிழிசை, மாணவி ஜீவிதாவைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல்,அவரின் மருத்துக் கட்டண செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டு படிக்க வைப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தமிழசையின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

click me!