நான் பேசும் தமிழ் புரிந்தால்தான் தமிழ் வாழும்... கமல்ஹாசன் சூசகம்..!

Published : Jul 15, 2021, 05:02 PM IST
நான் பேசும் தமிழ் புரிந்தால்தான் தமிழ் வாழும்... கமல்ஹாசன் சூசகம்..!

சுருக்கம்

எவருக்கும் தோல்விகள் ஏற்படும். ஆனால், ஒருவருடைய தோல்விக்கு இவ்வளவு பேர் வருத்தப்பட்டு நான் பார்ப்பது இதுவே முதல் முறை.

நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் நம்மவர் தொழிற்சங்க பேரவை துவக்க விழா, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ‘மக்கள் நீதி மய்யம் கட்சிக்கென்று அடிப்படை தகுதி என்று ஒன்று இருக்கிறது. அது நேர்மை. அது இங்கே மிக அவசியம். கண்ணதாசன் வசனம், கருணாநிதி வசனம், இளங்கோவன் இவர்களுடைய வரிகளைப் புரிந்து கொண்ட தமிழகத்தில் என் வசனம் புரியாதா? நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும்.

எவருக்கும் தோல்விகள் ஏற்படும். ஆனால், ஒருவருடைய தோல்விக்கு இவ்வளவு பேர் வருத்தப்பட்டு நான் பார்ப்பது இதுவே முதல் முறை. தமிழ்நாடு வரைபடத்தை கிழிக்க முயற்சிக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும் லாங் லிவ் தமிழ்நாடு.

எனது தலைவர் காந்தி தான் என்று சொல்வதால் எனக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காந்தி மாதிரியான ஆட்கள் தான் இன்றைய தேவை, இனி இந்தியா இப்படி தான் இருக்கும் என்பவர்களால் மட்டும் தான் நல்ல அரசியல் செய்ய முடியும். தமிழ்நாட்டின் வரைபடத்தை கிழிக்க வேண்டும் என்ற திட்டத்தை முறியடிக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு