கர்நாடகாவில் தோன்றியிருக்கும் ஜனநாயகத்தை வரவேற்றதுடன், டிவிட்டரில் கர்நாடக முதல்வருக்கு வாழ்த்தும் கூறிய கமலஹாசன்.

First Published May 19, 2018, 9:11 PM IST
Highlights
Tamil politician congrats Karnataka chief minister in twitter


கர்நாடகாவில் இன்று நடந்திருக்கும் இந்த அரசியல் மாற்றத்தை, ஒட்டு மொத்த இந்தியாவே வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க 104 இடங்களில் ஜெயித்தும் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போய்விட்டது. பா.ஜ.க-வின் இந்த தோல்வியை தான் நாங்கள் எதிர்பார்த்தோம். என்பது போல பல்வேறு அரசியல் பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.

”மக்கள் நீதி மய்யம்” கட்சியின் நிறுவனரும் நடிகருமான கமலஹாசனும், அதே போன்றதொரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் ”கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி,  தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு” என கூறியிருக்கிறார்.

கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு.

— Kamal Haasan (@ikamalhaasan)

மேலும் அவர் ”ஜனநாயாகத்திற்கு உங்களை வரவேற்கிறேன் . கர்நாடகத்தின் முதலமைச்சரை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். நான் காத்திருந்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்” என கூறியிருக்கிறார்.

Welcome to Democracy Sir. I am proud to congratulate the legitimate Chief Minister of Karnataka. Glad I waited.

— Kamal Haasan (@ikamalhaasan)
கமல் கர்நாடக முதல்வருக்கு தெரிவித்திருக்கும் இந்த வாழ்த்தை பார்க்கும் போது, இப்படி ஒரு முடிவை தான் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில், கமல் எதிர்பார்த்திருக்கிறார். என்பதை அவர் மறைமுகமாக தெரிவித்திருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது.

click me!