தமிழக மக்களுக்கு தமிழிசை பகிரங்க மிரட்டல்... பாஜகவுக்கு ஓட்டுப் போடாததால் ஆத்திரம்..!

By Thiraviaraj RMFirst Published Jun 27, 2019, 3:05 PM IST
Highlights

தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்ற திமுக எம்.பிக்கள் மனு மட்டுமே கொடுத்து வருகிறார்கள். பாஜகவுக்கு ஓட்டுப்போடாததால் தமிழகத்திற்கு இழப்பு எனத் தமிழிசை தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்ற திமுக எம்.பிக்கள் மனு மட்டுமே கொடுத்து வருகிறார்கள். பாஜகவுக்கு ஓட்டுப்போடாததால் தமிழகத்திற்கு இழப்பு எனத் தமிழிசை தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், ’கார்த்தி.சிதம்பரம்-பியூஷ்கோயலிடம் கோரிக்கை மனு. கலாநிதி வீராசாமி- ராஜ்நாத் சிங்கிடம் மனு. டிஆர்பாலு ரயில்வே மேலாளரிடம் மனு! தயாநிதி தென்னக ரயில் ஆபிசில் மனு! அமேதியில் அமைச்சர் ஸ்மிதிராணி ஒரே மாதத்தில் பலகோடி மதிப்பில் திட்டங்களை துவக்கி அசத்தல். பாஜகவை தோற்கடித்த தமிழகம்..? இழப்பு???’’ எனத் தெரிவித்து இருந்தார். 

தமிழகத்தில் ஓட்டுப்போடாததால் மனு மட்டுமே தமிழக எம்.பிகள் கொடுத்து வருகின்றனர். அமேதியில் வெற்றி பெற்றதால் அந்தத் தொகுதிக்கு பாஜக எம்.பி பலகோடி பதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்து வருகிறார். ஆகையால் பாஜகவுக்கு ஓட்டுப்போடாததால் தமிழகத்திற்கு இழப்பு என்கிற அர்த்தத்தில் அமைத்திருக்கிறது தமிழிசையின் கருத்து. இதற்கு எதிராக பலரும் கடுமையாக கண்டித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் தமிழக எம்.பி.க்கள் கொடுக்கும் மனுக்கள் குப்பைக்கு தான் போகும்,,, ஏதும்.. செய்ய மாட்டார்கள்... அப்படி தானே அக்கா... என்ன இழப்பு? கார்த்தியும், தயாநிதியும், பாலுவும் கோரிக்கை வைக்கிறது தமிழக மக்களுக்காகத் தானே? அதை அந்த அமைச்சர்கள் செய்ய மாட்டாங்களா? உங்கள ஜெயிக்க வச்சா தான் செய்வாங்கன்னு சொல்றிங்களா? துணிச்சல் இருந்தா முடியாதுன்னு சொல்லித் தான் பாருங்களேன்.

கட்சியில இருக்க எல்லாருமே விஷம் தான். அதை கக்குற நேரம் தான் மாறுது. இந்தம்மாவுக்கும் நிர்மலா சீத்தாராமனுக்கும் என்ன வித்தியாசம் இருக்குது.
திட்டம் எதுவும் வராதுனா வாங்குற வரி வேண்டாம்னு சொல்லுற தைரியம் இருக்குதா?

— சமரன் (@nomadic_idiot)

 

அக்கா இன்னும் அந்த தோல்வியில் இருந்து மீண்டு வரவில்லை என நினைக்கிறேன். நீங்களும் உடன் சேர்ந்து மன நல ஆலோசனை பெற்று விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்...

— பாகாநத்தம் பா.சத்ரியன் (@BalaSathriyan)

 

என்ன இழப்பு? கார்த்தியும், தயாநிதியும், பாலுவும் கோரிக்கை வைக்கிறது தமிழக மக்களுக்காகத் தானே? அதை அந்த அமைச்சர்கள் செய்ய மாட்டாங்களா? உங்கள ஜெயிக்க வச்சா தான் செய்வாங்கன்னு சொல்றிங்களா? துணிச்சல் இருந்தா முடியாதுன்னு சொல்லித் தான் பாருங்களேன்.

நீங்கள் மத்திய மந்திரி ஆகமுடியவில்லை என்ற வருத்தமா? மத்திய பாஜக தமிழகத்தை வெளிப்படையாகவே வஞ்சிக்கிறது என்று அழகாக சொல்லிவிட்டீர்கள். சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களையும் தமிழக MP க்களின் கோரிக்கைகளையும் நீங்கள் குப்பை தொட்டிக்கித்தானே அனுப்புகிறீர்கள்.

ஸ்மிருதி இராணி பல கோடி மதிப்பில் திட்டங்கள் துவங்கியது தமிழ்நாட்டின் வரிப்பணத்தில் வைத்துதான்..
உத்தரபிரதேச மாநிலத்தில் ஏது சொந்த வரிப்பணம்?????. கொஞ்சமாவது சூடு சொரணை இருக்கா அக்கா. எங்கள் உழைப்பில் வந்த வரிப்பணம் அது.

— செங்கோட்டை நிஜாம் (@Mohamme43806505)

உங்கள MP ஆக்கி அனுப்புனா மட்டும் காவிரிய கையோட அள்ளி வந்துட போறீங்களா...? ஜெ ஆட்சிக் காலத்தில கூட எந்த அரசு மத்தியில ஆட்சி செய்தபோது ஒரு லட்சம் கடிதம் எழுதுனாங்க..எதாவது நடந்துச்சா.. போய் குளங்களில் தண்ணிய தாமரைய மலர வைங்க மேடம்..

— yesmuskil (@forbidder123)

கோரிக்கை மனு, கோரிக்கை மனு.... என்ன பிச்சையா கேட்டார்கள்? உங்களுக்கு திராணி இருந்தால் தமிழ்நாட்டு வரி எதுவும் வேண்டாம் என்று சொல்லுங்கள்!! நிலுவை ஜிஎஸ்டி வரி 13500கோடியை தரசொல்லுங்கள்!!

— P பெருமாள் (@kanxbd69)

 

தமிழக M P க்கள் கொடுத்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அமைச்சர்களை நீங்கள் வற்புறுத்த வேண்டும். பிறகு அந்த கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் மக்கள் உங்கள் மீது கோபத்தில் இருக்கிறார்கள். அதை விட்டுவிட்டு தமிழ் நாட்டு மக்கள் மீது கோபம் கொள்ள கூடாது’’ என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

click me!