கூட்டணிக்குள் வேட்டு வைத்த கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்... தமிழக காங்கிரஸ் அதிரடி..!

By Thiraviaraj RMFirst Published Jun 27, 2019, 1:42 PM IST
Highlights

கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கட்சிக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் ஒழுங்கீனம் காரணமாக நடவடிக்கையில் ஈடுபட்டதால் கராத்தே தியாகராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேண்டுகோபால் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்ர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப்போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் கூறி இருந்தார். இதனைத் தொடர்ந்து திருச்சியில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய திமுக மூத்த எம்.எல்.ஏ கே.என்.நேரு, ‘ காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை ஆண்டுகள் பல்லாக்கு தூக்குவது? அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு சகித்துப் போக முடியாது. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விலக்கி விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என பேசியது இரு கட்சி கூட்டணிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இது குறித்து கருத்து தெரிவித்த கராத்தே தியாகராஜன், திருச்சியில் திருநாவுக்கரசர் தான் வெற்றி பெற்றதற்கு தனது தனிப்பட்ட செல்வாக்கே காரணம் எனத் தெரிவித்தார். தான் பெற்ற 4.5 லட்சம் வாக்குகளில், கூட்டணிக்காக  கிடைத்த வாக்குகள் 2 லட்சம். தனது தனிப்பட்ட செல்வாக்கிற்கு கிடைத்த வாக்குகள் 2.5 லட்சம் என திருநாவுக்கரசர் கூறியதால் தான் கே.என். நேரு கோபப்பட்டு கூட்டணி கூடாது என கூறிவிட்டதாக கராத்தே தியாகராஜன் கூறியிருந்தார். 

உடனே கடுப்பான திருநாவுக்கரசர், நான் அப்படி சொல்லவே இல்லை. கராத்தே தியாகராஜனின் கருத்து கண்டிக்கத்தக்கது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கோரி இருந்தார். இந்நிலையில், கட்சிக்கு எதிரான செயல்பாடுகளால் அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை அறிவித்து இருக்கிறது.  

click me!