தமிழகத்தில் நாளை முதல் முகக்கவசம் காட்டாயம்.. எங்கெல்லாம் தெரியுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி..!

By vinoth kumarFirst Published Mar 31, 2023, 10:25 AM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து தற்போது தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் நாளை முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து தற்போது தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நேற்று தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 689 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் 86 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாகவும், உயிரிழப்பு எதுவும் இல்லை என சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்;- தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர், நாளை முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சிகிச்சைக்கு வருபவர்கள், உடன் வருவோர், உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் 100 சதவீதம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

click me!