வைக்கம் விழா அறிவிப்பு..! நன்றி சொல்ல அழைத்த சபாநாயகர்- தயங்கிய நயினார்- அப்புறம் நடந்தது என்ன தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Mar 31, 2023, 9:09 AM IST

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு சட்டமன்ற கட்சி தலைவர்கள் நன்றி தெரிவித்தும் பாராட்டியும் பேசிய நிலையில், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ராமர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.


வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா அறிவிப்பு

வைக்கம்  போராட்டம் நடைபெற்ற மார்ச் 30 நாள் தொடங்கி வைக்கம் நூற்றாண்டு விழா தமிழகத்தில் 1 வருடம் நடத்தப்படும் ஆண்டு தோறும் செப் 17 ம் தேதி வைக்கம் விருது வழங்கபடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு நன்றி தெரிவித்து சட்டமன்றத்தில் உள்ள கட்சிகள் பேசினர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இது தொடர்பாக பேசுகையில், வரலாற்று நிகழ்வான இந்த நிகழ்ச்சியை முதல்வர் மு க ஸ்டாலின் ஒரு வரலாற்று அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறார்.

Latest Videos

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த ஓபிஎஸ்..! என்ன காரணம் தெரியுமா.?

நன்றி தெரிவித்த ஓபிஎஸ்

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு பெரியாரின் கொள்கைகள் தான் முக்கிய காரணமாக இருந்ததாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ள இந்த சிறப்பான அறிவிப்பு வரலாற்றில் இடம் பெறும் எனவும் தெரிவித்தார். இதே போல காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் தங்களது கருத்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். அப்போது பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை பேசுவதற்கு சபாநாயகர் அப்பாவு அழைத்தார், இதனை எதிர்பார்க்காத நயினார் நாகேந்திரன் சற்று தயங்கினார்,

தயங்கிய நயினார் நாகேந்திரன்

பெரியார் குறித்து அறிவிப்புக்கு ஒரு நன்றி கூட சொல்ல முடியாதா என சபாநாயகர் கேட்டார். மேலும் 110 விதி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்றும் நன்றி தான் தெரிவிக்க முடியும் என கூறினார். இதனை தொடர்ந்து பேசிய பா,ஜ.க சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிக்கும் அவர் பங்கேற்கவுள்ள அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு இன்று ராமர் பிறந்தநாள் என்பதையும் நினைப்படுத்த விரும்புகிறேன். அனைவருக்கும் ஸ்ரீராமநவமி வாழ்த்துக்கள் " என்று சொல்லி விட்டு அமர்ந்தார். 

இதையும் படியுங்கள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! பேராசிரியர்கள் மீது நடவடிக்கை.? நள்ளிரவிலும் கலாஷேத்ராவில் தொடர்ந்த போராட்டம்

click me!