முக கவசங்களை மருத்துவமனைகளில் மட்டுமாவது கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவமனைகளுக்கு வருபவர்களும் மருத்துவமனை பணியாளர்களும் முக கவசம் அணியவேண்டும் என்பது அவசியமாகும்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியத்தை நெருங்கி வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- உலகம் முழுவதும் ஒமிக்ரான் உருமாற்ற வைரஸின் தாக்கம் மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 3000 கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியத்தை நெருங்கி வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. ஆனால், ஒரே பகுதியில் பலரையும் பாதிக்கிற கிளஸ்டர் வகை பரவல் இல்லை என்பது ஆறுதலான விஷயம்.
இதையும் படிங்க;- என்னால மூச்சுக்கூட விட முடியல.. ரத்த ரத்தமா வருது.. கடைசியாக பேசிய ஜிம் டிரெய்னரின் கலங்க வைக்கும் ஆடியோ வைரல்
இது மிதமான பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றாக இருப்பதால், மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. ஆனாலும், கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முக கவசங்களை மருத்துவமனைகளில் மட்டுமாவது கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவமனைகளுக்கு வருபவர்களும் மருத்துவமனை பணியாளர்களும் முக கவசம் அணியவேண்டும் என்பது அவசியமாகும். ஏனெனில் மருத்துவமனைகளில் தான் அதிகமாக கொரோனா பரவ வாய்ப்புள்ளது. ஆகையால், தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்றார்.
இதையும் படிங்க;- வெயிலால் ஸ்கூலுக்கு செல்ல முடியாமல் குழந்தைகள் தவிக்கிறாங்க.. உடனே எக்ஸாம் நடத்தி லீவு விடுங்க.. அன்புமணி.!
உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஊட்டசத்து மருந்து, ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ள கூடாது. அளவுக்கு அதிகமாக பயிற்சி செய்வதும் விபரீதமான முடிவுகளை ஏற்படுத்தும். எனவே, மருந்து, மாத்திரையோ, உடற்பயிற்சியோ எதுவாக இருந்தாலும் மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும் என என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.