அடிதூள்... தமிழகத்தில் புதிய அணைகள் கட்ட 1200 கோடி...!! தமிழக அரசு அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 23, 2019, 4:16 PM IST
Highlights

அனைவரும் தண்ணீரை நீர்ம தங்கமாக பார்க்க வேண்டும் என்றும் தொழில் நிறுவனங்கள், சமுக மேம்பாட்டு நிதியை, நீர் ஆதாரங்களை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர் ஆதாரங்களை மேம்படுத்த தமிழக அரசு குடிமராமத்து பணிகள் மூலம் 1200₹ கோடி ஒதுக்கி, விவசாயிகள், பொதுமக்கள் ஒத்துழைப்போடு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது 

அணை கட்ட வாய்ப்பிருக்கும் இடங்களில் எல்லாம் அணை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு நீர்வளப்பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்பு கழக மேலாண்மை இயக்குனர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். 

 

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நீர் வள மேலாண்மை குறித்த கருத்தரங்கு நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு நீர்வளப்பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்பு கழக மேலாண்மை இயக்குனர் சத்யகோபால், ஜெர்மன் துணை தூதர் கரின் கிரிஸ்டினா மரியா ஸ்டோல் மற்றும் இந்திய தொழிற்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  அப்போது மேடையில் பேசிய தமிழ்நாடு நீர்வளப்பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்பு கழக மேலாண்மை இயக்குனர் சத்யகோபால், 2017 ஆம் ஆண்டு 100 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை தமிழகம் கையாண்டது என்றும், சென்னையில் இந்தாண்டு கடும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு, 4 நீர் ஆதாரங்கள் வறண்ட போதும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது என்றார். 

மேலும் நாம் அனைவரும் தண்ணீரை நீர்ம தங்கமாக பார்க்க வேண்டும் என்றும் தொழில் நிறுவனங்கள், சமுக மேம்பாட்டு நிதியை, நீர் ஆதாரங்களை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நீர் ஆதாரங்களை மேம்படுத்த தமிழக அரசு குடிமராமத்து பணிகள் மூலம் 1200₹ கோடி ஒதுக்கி, விவசாயிகள், பொதுமக்கள் ஒத்துழைப்போடு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றார். மேலும் அரசாங்கம், தொழிற்சாலை, ஒருங்கிணைந்து நீர் மேலாண்மை ஏற்படுத்துவது தொடர்பான கருத்தரங்கில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டது என்றும் தெரிவித்தார். 

குடி நீர் மட்டுமல்லாது விவசாயம், தொழில்நிறுவனங்களுக்கு தேவையான நீரை சேமிப்பது தொடர்பான ஆலோசனையும் நடத்தப்பட்டது என்றும் தண்ணீரை சேமிக்க குடிமராமத்து திட்டத்திற்காக 1200 கோடி ஒதுக்கப்பட்டு, விவசாயிகளின் ஒத்துழைப்போடு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். தமிழக அரசு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுகு தேவையான தண்ணீரை வழங்க தேவையான பல்வேறு திட்டங்கள் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும், கடலூர் தென்பெண்ணையாறு பகுதியில் அணைகட்டுவதற்கு ஏற்ற சூழல் இருப்பதாக தகவல் வந்துள்ளதையடுத்து, அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் சத்தியகோபால் தெரிவித்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் தண்ணீரை சேமிக்க அணைகள் கட்ட வாய்ப்பிருக்கும் இடங்களில் எல்லாம் அணை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சத்தியகோபால் தெரிவித்தார். புழல் ஏரி பகுதிகளில் கட்டடம் கட்ட அனுமதி வழங்கியது தொடர்பான முழு தகவல் கிடைக்கப்பெறவில்லை என்றும் அது தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

click me!