சோனியா சந்தித்த சில மணிநேரங்களிலேயே டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன்... நீதிமன்றம் அதிரடி..!

By vinoth kumarFirst Published Oct 23, 2019, 3:18 PM IST
Highlights

கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நிபந்தனை வழங்கியுள்ளது. மேலும், வெளிநாடு செல்ல கூடாது என்றும், ரூ.25 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பணமோசடி வழக்கில் கைதான கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவகுமார் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் செப்டம்பர் 3-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அக்டோபர் 1-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். பின்னர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அக்டோபர் 15, 25 வரை என இருமுறை காவல் நீட்டிக்கப்பட்டது. 

இதனிடையே, டி.கே.சிவகுமார் ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்திருந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திகார் சிறையில் இருக்கும் டி.கே.சிவகுமாரை இன்று நேரில் சந்தித்து பேசினார். 

இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வந்த போது கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நிபந்தனை வழங்கியுள்ளது. மேலும், வெளிநாடு செல்ல கூடாது என்றும், ரூ.25 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் சிவக்குமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. 

click me!