வெளி மாநிலங்களில் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்! சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு!

 
Published : Jan 11, 2018, 11:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
வெளி மாநிலங்களில் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்! சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு!

சுருக்கம்

Tamil Nadu student attacks on foreign states should be stopped

தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று பயிலும்போது அவர்கள் தாக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் மாணவர்கள், பாதுகாப்பாக படிக்கும் நிலை இங்கு உள்ளது. ஆனால், தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்று படிக்கும் மாணவர்கள் தாக்கப்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது என்றார்.

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலம் சென்று படிக்கும் மாணவர்கள் தாக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்கொலை செய்த சரவணன் இறப்பு பற்றி எந்தவித விளக்கமும் இல்லை என்றும் பிரேத பரிசோதனையில் அது தற்கொலையாக இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதையும் ஸ்டாலின் அப்போது குறிப்பிட்டார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!