டிமிக்கி கொடுத்து வந்த சசி கணவர் நடராஜன் நீதிமன்றத்தில் ஆஜர்!

 
Published : Jan 11, 2018, 11:18 AM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
டிமிக்கி கொடுத்து வந்த சசி கணவர் நடராஜன் நீதிமன்றத்தில் ஆஜர்!

சுருக்கம்

Natarajan surrendered in CBI Court

போலி ஆவணங்களைக் கொண்டு சொகுசுகார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கின் தண்டனையில் இருந்து ஜாமீன் பெறுவதற்காக, சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

லண்டனில் இருந்து லக்சஸ் சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டதில் போலி ஆவணங்களை தயாரித்து சுங்கவரி மோசடியில் ஈடுபட்டதாக சசிகலாவின் கணவர் நடராஜன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. சென்னை துறைமுகத்துக்கு லண்டனில் இருந்து லக்சஸ் ரக சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டது. 1994 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த காரை 199 ஆம் ஆண்டு தயாரித்ததாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து குறைவான சுங்கவரி செலுத்தப்பட்டது.

இதன்மூலம், ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி சசிகலாவின் கணவர் நடராஜன், வி.பாஸ்கரன், லண்டனைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஸ், இந்தியன் வங்கி கிளை மேலாளர் சுஜரிதா, உதவி மேலாளர் பவானி ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இதில் பவானி அப்ரூவராக மாறினார். பாலகிருஷ்ணன் தலைமறைவானார். இதையடுத்து நடராஜன் உட்பட எஞ்சிய 4 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2010 இல் உத்தரவி்ட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடராஜன் உட்பட 4 பேருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தவிட்டிருந்தது.

ஏற்கனவே, உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன், தீர்ப்பின்போது, தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நடராஜனின் உடல்நலக் குறைவைக் கருத்திக் கொண்டு, சீரணடைய நீதிமன்றம் விலக்கு அளித்திருந்தது. இந்த நிலையில், நடராஜன் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். சொகுசு கார் இறக்குமதி வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக அவர் இன்று ஆஜராகி உள்ளார். 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!