பெரியார் பிறந்த நாள் தினம் - அரசியல் தலைவர்கள் மலர்தூவி மரியாதை...!

Asianet News Tamil  
Published : Sep 17, 2017, 12:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
பெரியார் பிறந்த நாள் தினம் - அரசியல் தலைவர்கள் மலர்தூவி மரியாதை...!

சுருக்கம்

Tamil Nadu political leaders are paying homage to his idol on the 139th birthday of Periyar.

பெரியாரின் 139வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ. இராமசாமி கடந்த 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று ஈரோட்டில் பிறந்தார். 

ஜாதிய ஒடுக்குமுறைகளை அழிக்கும் சமூக சீர்திருத்ததிற்காவும், மூட நம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும் போராடிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார். 

பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடியவர் தந்தை பெரியார். 

1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி உடல் நலக்குறைவால் தனது 94வது வயதில் உயிரிழந்தார் 

இந்நிலையில், தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாள் விழா இன்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அவரது உருவ சிலைக்கும் புகைப்படத்திற்கும் அரசியல் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். 

தமிழக அரசு சார்பில் சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். 

அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் மற்றும் மதுசூதனன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.

சென்னை சிம்சன் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப்படத்திற்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

பெரியாரின் திரு உருவ படத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

அதேபோல் ஜெ.தீபா மற்றும் மாதவன் ஆகியோர் பெரியாரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!