பெரியார் மறுக்க முடியாத உண்மை - கமலஹாசன் பதிவு...

Asianet News Tamil  
Published : Sep 17, 2017, 11:42 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
பெரியார் மறுக்க முடியாத உண்மை - கமலஹாசன் பதிவு...

சுருக்கம்

kamalahassan greetings to periyar evr

பெரியார் செயலை, உணர்வை, நினைவை போற்றுவோம் எனவும் 1879,செப்டம்பர்17ஆம் தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும் எனவும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

மேலும், பெரியார் மறுக்க முடியாத உண்மை எனவும் வாய்மையே வென்றது எனவும் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ. இராமசாமி கடந்த 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று ஈரோட்டில் பிறந்தார். 

ஜாதிய ஒடுக்குமுறைகளை அழிக்கும் சமூக சீர்திருத்ததிற்காவும், மூட நம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும் போராடிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார். 

சமூக சீர்திருத்தத்துக்காக, தமிழகத்தில் மிக முக்கியமாக இயக்கப்படும் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். 

பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடியவர் தந்தை பெரியார். 

1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி உடல் நலக்குறைவால் தனது 94வது வயதில் உயிரிழந்தார் 

இந்நிலையில், தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாள் விழா இன்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

பெரியார் செயலை, உணர்வை, நினைவை போற்றுவோம் எனவும் 1879,செப்டம்பர்17ஆம் தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும் எனவும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

மேலும், பெரியார் மறுக்க முடியாத உண்மை எனவும் வாய்மையே வென்றது எனவும் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!