டிடிவி எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பா? - கோரிக்கையை நிராகரித்தது கர்நாடக போலீஸ்..

First Published Sep 17, 2017, 11:16 AM IST
Highlights
The Karnataka state AIADMK secretary has demanded that the DVP party be protected from MLAs.


டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியின் கோரிக்கையை அம்மாநில போலீஸ் நிராகரித்துள்ளனர். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிரணியாக இருந்த ஒபிஎஸ்சுடன் கைகோர்த்ததால் டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என கோரி தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். 

இதனிடையே டிடிவியையும் சசிகலாவையும் கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி தலைமயிலான பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. 

இந்நிலையில், டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் கர்நாடக மாநிலம் கூர்க்கில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். 
எடப்பாடி தூண்டுதலின் பேரால் தமிழக காவல்துறை தங்களை அச்சுறுத்துவதாக டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் 18 பேர் கர்நாடக போலீசிடம் புகார் அளித்தனர். 

இந்நிலையில், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி கர்நாடக போலிசிடம் எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

ஆனால் புகழேந்தியின் கோரிக்கையை கர்நாடக போலீசார் நிராகரித்தனர். மேலும், ரிசார்ட்டில் இருந்து கேட்டுக்கொண்டால் மட்டுமே தங்களால் பாதுகாப்பு தர முடியும் என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். 
 

click me!