
ஒவ்வொருவரும் தூய்மையை கடைபிடித்து மகிழ்வோடு வாழ வேண்டும் எனவும், தேங்கி நிற்கும் தண்ணீரை தாமாக முன்வந்து பொதுமக்கள் அகற்ற வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம் என்ற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி சேலத்தில் தூய்மை ரத சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
பின்னர் இந்த விழாவில் பேசிய அவர், ஒவ்வொருவரும் தூய்மையை கடைபிடித்து மகிழ்வோடு வாழ வேண்டும் எனவும், தேங்கி நிற்கும் தண்ணீரை தாமாக முன்வந்து பொதுமக்கள் அகற்ற வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
மேலும், அரசுடன் சேர்ந்து பொதுமக்களும் உதவி செய்தால் டெங்கு காய்ச்சலை முழுமையாக ஒழிக்க முடியும் என தெரிவித்தார்.
இதில் சுகாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ செம்மலை, சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.