திமுக உடந்தையுடன் தீவிரவாதிகளின் கூடாரமானது தமிழகம்... எடப்பாடியை அரசையும் உரசும் பொன்னார்..!

Published : Jan 13, 2020, 12:14 PM ISTUpdated : Jan 13, 2020, 12:17 PM IST
திமுக உடந்தையுடன் தீவிரவாதிகளின் கூடாரமானது தமிழகம்... எடப்பாடியை அரசையும் உரசும் பொன்னார்..!

சுருக்கம்

அரியலூர் தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாவட்ட தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் பாஜக தனித்து போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வருங்காலங்களில் கூட்டணியாக செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தீவிரவாதிகளால் காவல் உதவி ஆய்வாளர் கொல்லப்பட்டது குறித்து சட்டமன்றத்தில் யாரும் விவாதிக்கவில்லை. 

தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக மாறிவிட்டதாக மீண்டும் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது அதிமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாவட்ட தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் பாஜக தனித்து போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வருங்காலங்களில் கூட்டணியாக செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தீவிரவாதிகளால் காவல் உதவி ஆய்வாளர் கொல்லப்பட்டது குறித்து சட்டமன்றத்தில் யாரும் விவாதிக்கவில்லை. 

இதையும் படிங்க;- சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்கள் விசாரிக்க போவதில்லை... வேற லெவல்ல விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு..!

இது தொடர்பாக அதிமுக, திமுக கட்சிகள் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. சிறுபான்மையினர் வாக்குக்காக கட்சிகள் அரசியல் செய்கின்றன. திமுக கூட்டணி கட்சிகளோடு பயங்கரவாதிகளும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இதற்கு திமுக விளக்கமளிக்க வேண்டும். தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே நான் இதனை கூறி வருகிறேன். 

இதையும் படிங்க;-  உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டியே முருகா... நெல்லைக் கண்ணனை வீட்டுக்கே போய் சந்தித்த வேல்முருகன்..!

தற்போது கேரளா, குஜராத், புதுடெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழகத்தை சார்ந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது இதை உறுதிப்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!
ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!