பாஜக புதிய தேசிய தலைவர் தேர்வு !! பதவி விலகுகிறார் அமித் ஷா !!

By Selvanayagam PFirst Published Jan 13, 2020, 12:11 PM IST
Highlights

பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் வரும் 20 ஆம் தேதி புதிய தலைவராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தலைவராக உள்ள அமித் ஷா  பதவி விலகுகிறார்.

தற்போது பாஜக , தேசிய தலைவராக உள்ள அமித்ஷா, கடந்த 4 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்து வருகிறார். அவரின் பதவிக்காலம் கடந்த  2019 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே முடிவடைந்தது. 

ஆனாலும்  மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்தல் முடியும் வரை அவரே தலைவராக இருக்கும்படி  அக்கட்சி கேட்டுக் கொண்டது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக , அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. 

இந்நிலையில், பாஜக  புதிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது பாஜக  செயல் தலைவராக உள்ள அவர், ஜனவரி 20 ஆம் தேதி பாஜக , தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வார் என கூறப்படுகிறது.

அவரது பதவியேற்பு விழாவை சிறப்பாக நடத்தவும் பாஜக  திட்டமிட்டுள்ளது.பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, தற்போதைய பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நட்டாவுக்கு தலைவர் பதவி கிடைக்கும் எனவும் கூறப்படுகிது. டெல்லியில் வரும் பிப்ரரி மாதம் 8ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது . .

click me!